பரமக்குடியில் ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கிய திமுகவினர்…
August 9, 2021
0 203 Less than a minute
முன்னாள் முதல்வர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பரமக்குடியில் ஆயிரம் நபர்களுக்கு திமுகவினர் உணவு பொட்டலங்களை வழங்கினார்கள். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் பரமக்குடி நகர் கழகம் சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆதரவற்றோர், ஏழை எளிய மக்கள் உட்பட ஆயிரம் நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இதனை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். இதில் பரமக்குடி வடக்கு நகர் பொறுப்பாளர் ஜீவரத்தினம் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களூம் கலந்துகொண்டு ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்கள்.