மாவட்டம்
மின்னல் தாக்கியதில் கட்டிட தொழிலாளி மரணம் !

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெரிய பிச்சப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவேலு மகன் ரமேஷ், 35, இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. தற்போது குடும்பத்துடன் பார்த்திபனூர் காமாட்சி நகரில் வசித்து கட்டிட வேலை செய்து வருகிறார். இன்று மாலை பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

அப்போது மேலப்பெருங்கரை கிராமத்தில் கட்டிட வேலைக்கு சென்றபோது மழை காரணமாக புளிய மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.




