சினிமா

கண்ணியமான எழுத்தாளர்கள் சங்கத்தின் மாண்பை காற்றில் பறக்கவிட்ட நடிகை ரோஜாவின் ராஜா

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் 2018&2020 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அதாவது ஏற்கனவே இயக்குனர் விக்ரமன் தலைவராகவும், கவிஞர் பிறைசூடன் பொதுச்செயலாளராகவும், சிறப்பாக செயல்படும் இவர்களின் தலைமையிலான நிர்வாகம் அப்படியே தொடரவேண்டும் என்று பொதுக்குழுவுக்கு வந்திருந்த உறுப்பினர்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஆனால் தலைவராக இருந்த விக்ரமன் அவர் பதவி வகித்த காலங்களில்தான் சொன்னதை எதுவும் நிறைவேற்றாத காரணத்தால் எனக்கு உடல்நிலை சரியில்லை. எனக்கு இதயநோய் அறுவை சிகிச்சை விரைவில் நடக்க இருக்கிறது. அதனால் என்னால் செயல்பட இயலாது என்று கூறி இதுவரை பலமுறை சங்கத்தின் நிர்வாகத்திற்கு வர முயற்சி செய்து தோல்வியடைந்த நடிகர் பாக்கியராஜை நியமன தலைவராக முன்னிருத்தி, தன்னை கௌரவ தலைவராக்க வேண்டும் என்று உறுப்பினர்களிடம் கூறி இதையே தீர்மானமாக கொண்டு வந்தனர். ஆனால் அதன்பிறகு சங்கத்தில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் அதாவது பொதுக்குழு தீர்மானப்படி ஏற்கனவே இருந்த பழைய நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இல்லாமல் கூட்டப்பட்ட செயற்குழு கூட்டத்தில் எழுத்தாளர்கள் சங்கத்திற்கு தலைவர் பாக்கியராஜ் தவிர மற்ற பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்மானித்து பொதுக்குழுவில் எடுத்த முடிவை காற்றில் பறக்கவிட்டு செயற்குழு முடிவின்படி அதாவது சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு எதிராக நடிகை ரோஜாவின் ராஜா செல்வமணி தலைமையில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.


செயலாளர் பிறைசூடன் தவிர மற்றவர்கள் அனைவரும் அப்படியே நிர்வாகத்திற்கு வந்துவிட்டனர். அதன்பிறகு சங்கத்தில் நடைபெற்ற அனைத்து விசயங்களும் சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு எதிராக இருக்கிறதாம்.
சங்கத்தின் அறக்கட்டளையில் முறைகேடு நடந்திருப்பதாக முடிவு எடுக்கப்பட்டு நடிகை ரோஜாவின் ராஜா செல்வமணி தலைமையில் சங்கத்தின் தலைவர் பாக்கியராஜ், பொருளாளர் ரமேஷ்கண்ணா உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனிடம் சங்கத்தின் முன்னாள் தலைவர் நடிகர் மற்றும் இயக்குனர் விசு, பொதுச்செயலாளர் பிறைசூடன் மீது பொய்யான புகாரை தயார் செய்து கொடுத்திருக்கிறார்கள். இதனை படித்த காவல் ஆணையாளர் நீங்கள் கொடுத்த புகார் அறக்கட்டளை சம்பந்தமானது. புகார் கொடுக்க வேண்டுமானால் அறக்கட்டளை உறுப்பினர்களாக இருக்க வேண்டும். உங்களில் யாரும் அந்த அறக்கட்டளையில் இல்லை. அதனால் இந்தப் புகார் செல்லாது என்று திருப்பி அனுப்பி இருக்கிறார். இதை எதிர்பார்க்காத நடிகை ரோஜாவின் ராஜா செல்வமணி, பாக்கியராஜ் தரப்பினர் அவர்களுக்குள் வாக்குவாதம் செய்து கொண்டே வெளியே வந்து செய்தியாளர்களிடம் மோசடி புகார் என்று ரமேஷ்கண்ணா சொல்ல பிரச்சனை பெரிதாக ஆரம்பித்திருக்கிறது. இது சம்பந்தமாக பொய் சொன்ன பாக்கியராஜ் என்ற தலைப்பில் ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்பிறகு ரோஜாவின் ராஜா செல்வமணி பலமுறை இயக்குனர் விசுவிடம் சமாதான முயற்சியில் ஈடுபட்டார். செல்வமணியின் தொல்லை தாங்காத அறக்கட்டளை நிர்வாகம் தற்போது அறக்கட்டளையின் செயற்குழு கூட்டத்தை கூட்டி கீழ்காணும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அதாவது காவல்ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த பொய் புகாரை திரும்பப் பெற்று செய்தியாளர்கள் மத்தியில் மன்னிப்பு கேட்டு அந்த செய்தி முன்னணி செய்தி சேனல்களிலும், பத்திரிகைகளிலும் வந்து அதன் பிரதிகளை அறக்கட்டளை நிர்வாகத்தில் ஒப்படைத்தால் சமாதான பேச்சுவார்த்தை பற்றி அறக்கட்டளை நிர்வாகிகள் கூடி முடிவெடுக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
இந்த செய்தி எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இது சம்பந்தமாக நமது குழு விசாரணையில் இறங்கியபோது சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஹேமாமாலினி தரப்பில் கூறப்பட்ட செய்தி மேலும் அதிர்ச்சியடையச் செய்தது. எழுத்தாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் எதுவும் சரியாக இல்லாத காரணத்தால் சங்கத்தின் மேலாளர் ராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு செயற்குழு உறுப்பினர் ஹேமாமாலினி மேலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் சங்க வேலையாக சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி செயலாளர் மனோஜ்குமாரை தொடர்பு கொண்டால் நீயெல்லாம் ஒரு ஆளா? என்னை எதற்கு தொடர்பு கொள்கிறாய்? நீ கூப்பிடும் போதெல்லாம் நான் சங்கத்திற்கு வரணுமா? நான் வரும்போது தான் வருவேன் போனை வை என்று அநாகரீகமாக பேசியிருக்கிறார். இதை பாக்கியராஜீடம் கூறி புலம்பியிருக்கிறார்.
ஒருநாள் சங்கத்தின் அலுவலக உதவியாளர் ராஜவேலு (எ) வேலுச்சாமி, மனோஜ்குமார் கையொப்பமிட்ட காசோலையை எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்றிருக்கிறார். வங்கியில் காசோலையின் பின்பக்கம் மனோஜ்குமாரிடம் கையொப்பம் பெற்று வர சொல்லியிருக்கிறார்கள்.
உடனே வேலுச்சாமி, மனோஜ்குமாருக்கு போன் செய்து விஷயத்தை கூறி சார் எங்கே இருக்கிறீர்கள். நான் வந்து உங்களிடம் கையொப்பம் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு மனோஜ்குமார் நீ வரவேண்டாம். நானே அங்கு வருகிறேன். ஆனால் முதலிலேயே நீ என்னிடம் கையொப்பம் வாங்காமல் போனது உனது தவறு. அதனால் நான் அங்கு வருவதற்கு நூறு ரூபாய் நீ எனக்கு தரவேண்டும் என்று கூறி 100 ரூபாயை வாங்கிக் கொண்டுதான் சென்றாராம். இந்த செய்தியை நடிகை ரோஜாவின் ராஜா செல்வமணியிடம் கூறி புலம்பினாராம் அந்த அலுவலக உதவியாளர். சங்கத்தில் பொறுப்புக்கு வந்ததில் இருந்து மனநோயாளி போலவே அலைந்து கொண்டிருக்கிறார் மனோஜ்குமார்.


மனோஜ்குமாரின் செயல்பாடுகள் பிடிக்காததால் ஹேமாமாலினியும் சங்கத்திற்கு போவதில்லையாம். இந்நிலையில் ஏற்கனவே வேலை செய்த மேலாளர் ராஜன் தனக்கு சேரவேண்டிய பணத்தைக் கேட்டு வழக்கு தொடுக்க இருப்பதாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இந்த செய்தி அறிந்த நிர்வாகிகள் மனோஜ்குமாரின் ஆணவத்தால் சங்கம் நீதிமன்றம் செல்லும் அவலநிலைக்கு ஆளாகிவிட்டது என்று புலம்புகிறார்களாம்.
இதுபற்றி சங்கத்தின் உறுப்பினர்கள் கூறுகையில், கண்ணியமிக்க எழுத்தாளர்கள் சங்கத்தின் மாண்பை காற்றில் பறக்கவிட்ட பெருமை நடிகை ரோஜாவின் ராஜா செல்வமணியையே சாரும் என்று புலம்புகிறார்கள்.

-சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button