கல்லூரி விரிவுரையாளர்கள் வாயில் முழக்கு போராட்டம் ! பரமக்குடி அரசு கல்லூரியில் பரபரப்பு !

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம், நீதிமன்ற தீர்ப்பின்படி யுஜிசி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றக்கூடிய கௌரவ விரிவுரையாளர்கள், தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியில் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சார்பாக பணி நிரந்தரம், நீதிமன்ற தீர்ப்பின்படி யுஜிசி ஊதியம் ரூபாய் ஐம்பதாயிரம் பெரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உள்ளிருப்பு போராட்டம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது,பணி நிரந்தரம் வழங்க வேண்டும் , யுஜிசி நிர்ணயம் செய்த ஊதியம் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம், பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.