“பத்ம ஶ்ரீ” விருது பெறும் எச் வி ஹெண்டேவுக்கு குவியும் பாராட்டுக்கள் !

ஆண்டுதோறும் சிறந்த சேவை புரிபவர்களுக்கு “பத்ம ஶ்ரீ” விருது வழங்கி கௌரவித்து, பாராட்டி வருகிறது மத்திய அரசு. அந்த வகையில் தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் சிறப்பான சேவையாற்றி வரும் எச் வி ஹண்டேவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம ஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதானது ஜனாதிபதி கையொப்பமிட்ட சான்றிதழ் மற்றும் பதக்கம் ஜனாதிபதி வழங்கி கௌரவித்து பாராட்டுவார்.

மூத்த பத்திரிகையாளரும், நாற்காலி செய்தி இதழின் துணை ஆசிரியருமான கே.எம் சிராஜீதீன், எச் வி ஹெண்டே குறித்து பேசுகையில், சுகாதாரத்துறை அமைச்சராக பத்து ஆண்டுகள் எம்ஜிஆர் அமைச்சராகவும், 1988-1989 காலகட்டத்தில் அதிமுகவின் துணை பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இராமாயணம், டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். 1984 ஆண்டுமுதல் தனது மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அப்பகுதியினரின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.

இவரது சேவை பாராட்டும் வகையில் மத்திய அரசு இவருக்கு பத்ம ஶ்ரீ விருது அறிவித்துள்ளது. நூற்றாண்டில் அடியெடுத்து வைக்க உள்ள எச் வி ஹெண்டேவுக்கு “பத்ம ஶ்ரீ” விருது மிகவும் பொருத்தமானது. அவருடன் பழகிய நாட்களை எண்ணிப் பார்க்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது என பெருமிதத்துடன் கூறினார்.




