பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதத்தில் முதலிடம் பிடித்த மாணவி !

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு எழுதிய 8,71,239 மொத்த மாணவ, மாணவிகளில் 93.80 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,17,183 பேர் ( 95.88 சதவிகிதம் ) பேரும், மாணவர்கள் 4,00,078 ( 91.74 சதவிகிதம் ) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 4.14 சதவிகிதம் மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை எண்ணூரில் உள்ள சகாய மாதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் மூ. செய்யது அலி பாத்திமா என்கிற மாணவி ( 480 / 500 ) மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் கணிதத்தில் முதலிடமும், பள்ளியளவில் இரண்டாம் இடமும் பெற்று, தான் பயின்ற பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவருக்கு சக மாணவ, மாணவிகள், உறவினர்கள், அப்பகுதியினர் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் மூத்த பத்திரிகையாளர் கே.எம். சிராஜூதீனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.