30 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர் பயிற்சி மைய முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு !

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூரில் 1993 ஆம் ஆண்டு முதல் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி மையம். இங்கு 1993 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை 50 மாணவ, மாணவிகள் கல்வி பயின்றுள்ளனர். இவர்கள் தற்போது ஆசிரியர்கள் பேராசிரியர்களாக பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

முப்பது ஆண்டுகளுக்கு பிறகு பழைய மாணவ மாணவிகள் சந்தித்து, தங்களுக்கு பாடம் கற்று கொடுத்த ஆசிரியர்களுடன் நினைவுகளை பகிர்ந்து கொண்டு குழு போட்டோக்கள் எடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொண்டனர். அதேபோல் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி விட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்களில் இருவருக்கு, பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி மகிழ்ந்தனர்.

1993ஆம் ஆண்டு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டு அன்பை பரிமாறி கொண்ட சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.