சினிமா
சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பினை பெற்ற ரகுல் பிரீத் சிங்
மாலத்தீவிற்கு அடிக்கடி சென்று பிகினி உடையில் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து ரசிகர்களை மதி மயங்க செய்பவர் ரகுல் பிரீத் சிங். இந்த முறை இவர் மாலத்தீவு சென்ற போது, அவருடைய ஆண் நண்பர் ஜாக்கியும் மாலத்தீவில் இருந்திருக்கிறார். அதனால் இருவருக்குமான நெருக்கத்தை பத்திரிகைகள் எழுதித் தள்ளியது. விரைவில் ரகுல் பிரீத் சிங் ஜாக்கியை திருமணம் செய்வார் என கிசு கிசு கிளம்பியது. இப்போதைக்குத் திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை, என விளக்கம் அளித்துள்ளார் ரகுல் பிரீத் சிங். இவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பு கிடைப்பதால் தினசரி பதிவேற்றி வருகிறார்.