கோவை அருகே சுதந்திரதின நிகழ்வில், பள்ளி மாணவர் உலக சாதனை !
இந்தியா சுதந்திரம் அடைந்து, 78வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், கோவை மாவட்டம், சூலூரில், வருடந்தோறும் இந்திய தமிழ் கழகம் அறக்கட்டளை மற்றும் இரட்டைப் பாதை தொலைக்காட்சி சார்பாக புது முயற்சி மேற்கொண்டு நிகழ்ச்சிகள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதேபோல் இந்த வருடம் மாபெரும் உலக சாதனை செய்யும் விதமாக, நான்கு வகையான உலக சாதனை நிகழ்வுகளை செய்துள்ளனர். அதில் வள்ளி கும்மி மற்றும் கட்டுரை போட்டி, 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 78 தலைவர்கள் பற்றி 78 மாணவர்கள் கட்டுரை போட்டி எழுதியுள்ளனர். 78 மகளிர் அணியினர் இணைந்து வள்ளி கும்மி நிகழ்த்தியுள்ளனர், ஐந்தரை மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்துள்ளனர். எம்.என்.சி பள்ளியைச் சேர்ந்த கே.பிரசன்னா என்ற மாணவன் 5 மணி நேரம் 30 நிமிடம் தொடர்ச்சியாக இடைவிடாது சிலம்பம் சுற்றி லிங்கன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற புத்தகத்தில் தனது உலக சாதனை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-ஜான்