மோடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு ! முதலமைச்சர் முக ஸ்டாலின்
திருவள்ளூர், வடசென்னை நாடாளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரிக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில்… ஒன்றியத்தில் பிரதமராக மோடி பொறுப்பேற்றதிலிருந்து, நாட்டு மக்களை அவதிக்குளாக்கியதுதான் மிச்சம். குறிப்பாக தன்னை விஞ்ஞானியாக நினைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கப்போகிறேன் என தொலைக்காட்சியில் தோன்றி பண மதிப்பிழப்பை அறிவித்தார். இதனால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அவதிப்பட்டு தான் மிச்சம். இதனால் அவரைச் சார்ந்த பணக்காரர்கள் பயணடைந்ததுதான் அதிகம்.
கொரோனா காலத்தில் சானிட்டரி, மாஸ்க் போன்றவற்றுக்கு வரியை விதித்து மக்களைத் தவிக்க விட்டார். அதோடு விளக்கு ஏற்றி மணி அடித்தால் கொரோனா வராது எனக்கூறி மக்களை ஏமாற்றினார். பேரிடர் காலங்களில் தமிழ்நாட்டிற்கு எந்தவித நிதியையும் ஒதுக்காமல், தமிழ்நாடு அரசின் நிவாரண தொகையை பிச்சை என கொச்சைப்படுத்தும் விதமாக நிதி அமைச்சரை சொல்ல வைத்தவர் பிரதமர் மோடி. மீனவர்கள் பிரச்சினை பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், இன்று மீனவர்களை பாதுகாப்போம் என வெட்கமில்லாமல் மோடி பேசி வருகிறார். இப்படிப்பட்ட பிரதமர் மீண்டும் தேவைதானா ? அதனால்தான் மோடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்கிறேன் என பேசினார்.