இந்தியா

புல்வாமா தாக்குதல்: இந்தியா பதிலடி : பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு

எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்தும், பாகிஸ்தானுக்குள் ஊடுருவியும் இந்திய விமானப்படை பயங்கரவாதிகளின் மூன்று முகாம்களை குண்டு வீசி அழித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா எடுத்த இந்த நடவடிக்கையால் 350 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர்.
பிப்ரவரி 14 — உலகின் பல நாடுகளில் காதலர் தினம் கொண்டாடப்பட்ட போது, காஷ்மீரின் புல்வாமா அருகில் உள்ள அவந்திபுராவில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகன அணிவகுப்பில் தற்கொலை படை பயங்கரவாதி கார் குண்டு தாக்குதல் நடத்தினான். இதில் வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்ட இந்திய ராணுவம் விரிவான திட்டத்தையும் உருவாக்கியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முஷாபராபாத், சாகோத்தி, மற்றும் பாகிஸ்தானில் கைபர் பத்துவா பிராந்தியத்தின் பாலகோட் ஆகிய மூன்று இடங்களில் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் முகாம்களை நடத்தி வருவதை கண்டறிந்த இந்திய ராணுவம், தாக்குதல் திட்டத்தை வடிவமைத்தது.
செவ்வாய்கிழமை அன்று நாடே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நிலையில் அதிகாலை 3.30 மணி அளவில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் 12 புறப்பட்டன. அவை ஒவ்வொன்றிலும் சுமார் 500 முதல் 1000 கிலோ வரையிலான லேசர் குண்டுகள் ஏற்றப்பட்டன.
இதே நேரத்தில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படையின் முன்னோட்ட உளவு விமானம் ஒன்று புறப்பட்டது. இதே நேரத்தில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா விமானப்படைத் தளத்தில் இருந்து போர் விமானங்களுக்கு நடு வழியில் எரி பொருள் நிரப்பும் விமானம் ஒன்றும் புறப்பட்டது. அவற்றுடன் இணைந்து ஆளில்லா கண்காணிப்பு விமானம் ஒன்றும் இந்த படைகளுடன் இணைந்து விண்ணில் பறந்தது.
முதலில் ஆளில்லா ஹெரன் ரக விமானம் விண்ணில் எதிரி விமானங்களில் நடமாட்டம் உள்ளதா என்றும், தரையில் பாகிஸ்தான் விமான எதிர்ப்பு பீரங்கிகளின் இயக்கம் உள்ளதா என்றும் கண்காணித்தது. இதைத் தொடர்ந்து முன்னோட்ட விமானமும் இலக்குகளை துல்லியமாக ஆராய்ந்தது.
இஸ்ரேல் நாட்டு தயாரிப்பான லேசர் மூலம் இலக்கை மட்டுமே குறி வைத்து தாக்கும் 1000 கிலோ குண்டுகள் வீசப்பட்டன. பயங்கரவாத முகாம் கட்டிடங்கள், விடுதிகள், பயிற்சி மையங்கள், வெடிகுண்டு கிட்டங்கிகள் ஆகியவற்றை குறி வைத்து குண்டு மழை பொழிந்தது.
இதன் பின்னர் சக்கோதி என்ற இடத்தில் இருந்த முகாமின் மீது இந்திய விமானப்படை தனது மூன்றாவது மற்றும் கடைசி கட்ட தாக்குதலை தொடுத்தது. இந்த முகாமை இந்திய குண்டுகள் நொறுக்கி தள்ளியது.

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி தாக்குல் நடத்தி விட்டு திரும்பிய போது, அந்நாட்டு விமானப்படையின் எப் 16 ரக விமானங்கள் இரண்டு இடை மறிக்க முயன்றன. ஆனால் இந்திய விமானப்படையின் பெரிய அணிவகுப்பை கண்டதும், அந்த விமானங்கள் சத்தமின்றி ஓட்டம் பிடித்ததாக இந்திய விமானப்படை தகவல் அளித்துள்ளது.
1971-ஆம் ஆண்டு வங்க தேச யுத்தத்தின் போது, பாகிஸ்தானுக்குள் ஊடுருவி இந்திய விமானங்கள் தாக்குதல் தொடுத்தன.அதன் பின்னர் 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி தாக்கியது ஏன் என்பது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே டெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் குறித்த தகவல்களை அளித்த போதும் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க மறுத்தது என்றார். புல்வாமா தாக்குதலை அடுத்து மேலும் பல தாக்குதல்களை தொடுக்க அந்த அமைப்பு திட்டமிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தாக்குதலை தடுக்கவே , இந்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது என்று அவர் குறிப்பிட்டார். இது ராணுவ நடவடிக்கை அல்ல என்ற அவர், பயங்கரவாத முகாம்களை மட்டுமே இந்திய விமானப்படை அழித்துள்ளது என்றார்.
பாகிஸ்தான் நாட்டின் ராணுவ நிலைகள் மீதோ, அந்நாட்டு குடிமக்கள் மீதோ இந்திய விமானங்கள் ஒரு சிறிய தாக்குதலை கூட நடத்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் அனைத்து ஆசிய நாடுகளுக்கும் உரிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக விஜய் கோகலே தெரிவித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் விமானப்படையுடன் சண்டையிட்ட போது, விங் கமாண்டர் அபினந்தன் சென்ற மிக்-21 ரக போர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால், அபினந்தன் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் பாராஷூட் மூலம் தரையிறங்கினார். பாகிஸ்தான் ராணுவம், அவரை கைது செய்தது. அபிநந்தன் ரத்தக் காயங்களுடன் இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பிறகு தான் நலமாக இருப்பதாகத் தேநீர் அருந்தியபடி அபிநந்தன் பேசும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இரு தரப்பிலிருந்தும் நல்ல காரணமுள்ள செய்திகளை இந்தியா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து கேள்விப்படுகிறேன். இந்தப் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும்“ என்றார். அபிநந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது எனவும் இந்தியா கூறியுள்ளது. அதேவேளையில் அபிநந்தனை விடுவிக்க வேண்டுமென்றால் பாலகோட்டில் நடந்தது போன்ற மற்றொரு தாக்குதல் நடத்தமாட்டோம் என்று இந்தியா உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகமது குரோஷி இஸ்லாமாபாத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,இந்திய மக்களுக்குப் பாகிஸ்தான் ஒரு பொறுப்பான நாடு என்பதை நாங்கள் தெரியப்படுத்துவோம். அபிநந்தனுக்கும் எங்களுக்கும் எந்த தனிப்பட்ட விரோதமும் கிடையாது, ஜெனிவா ஒப்பந்தத்தை நாங்கள் பின்பற்றுவோம். அபிநந்தனை நாங்கள் நன்றாகவே கவனித்துக் கொள்கிறோம்‘’ என்று தெரிவித்தார்.
அவர் அந்நாட்டு அரசின் பிடியில் சுமார் 60 மணி நேரம் இருந்தார். இதையடுத்து, இந்தியாவிடம் அபினந்தனை ஒப்படைத்தது பாகிஸ்தான்.
எந்த நிபந்தனையுமின்றி பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியவந்த நிலையில், நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார் அதன் தொடர்ச்சியாக அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.
அபினந்தனின் வீரத்தைப் பறைசாற்றும் விதமாக இந்திய அளவில் #WelcomeBackAbhi என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகியது.
இந்த நிலையில் அபிநந்தனை மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button