மாவட்டம்

இராமநாதபுரத்தில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ! வியந்த நிர்வாகிகள் !

அதிமுக விற்கு ஒற்றைத் தலைமை என்கிற முழுமையான அதிகாரம் தன் கைவசம் வந்ததும் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க இருக்கிற முதல் தேர்தல் 2024 பாராளுமன்ற தேர்தல். அந்த தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் முகவர்களை நியமிக்க மாவட்டச் செயலாளர்கள் துரிதமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதற்காக பலமுறை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி விபரங்களை சேகரித்து வருவதோடு, அமைப்பு ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலைமைக் கழக நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் குழு அமைக்கும் பணியை துரிதமாக செய்து, அனைத்து ஒன்றியங்களிலும் தலைமை நியமித்த சுதா பரமசிவத்தை அழைத்து கூட்டங்களை நடத்தி வருகிறார் மாவட்டச் செயலாளர் முனியசாமி. அதன் தொடர்ச்சியாக திருவாடானை சட்ட மன்றத் தொகுதியில், மண்டபம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் பனைக்குளம், வாலாந்தரவை, பட்டிணம் காத்தான், தாமரைக்குளம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுதா பரமசிவம், கழக அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா, மாவட்டக் கழக செயலாளர் முனியசாமி, தகவல் தொழில்நுட்ப அணியின் விருதுநகர் மண்டலச் செயலாளர் சரவணகுமார், அம்மா பேரவை செயலாளர் பாலசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். மண்டபம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றியச் செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான மருது பாண்டியன் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ததோடு, மண்டபம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில், சமீபத்தில் ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்ட மருது பாண்டியன் நூறு சதவிகிதம் பணிகளை நிறைவேற்றியுள்ளதாக நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button