மாவட்டம்

பல்லடத்தை அதிரவைத்த 300 கோடி மோசடி வழக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பிரபல மோசடி மன்னன் தலைமையில் நடைபெற்ற சுமார் 300 கோடி மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிரப்பித்துள்ளது. பல்லடத்தை அடுத்த வேலப்பக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் சிவக்குமார், மற்றும் சகோதரர் விஜயகுமார், அழகுநிலைய பெண் பிரவீனா ஆகியோர் கடன் பெற்று திரும்ப செலுத்தமுடியாத அப்பாவிகளை குறி வைத்து வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி பலகோடி மதிப்பிலான சொத்துக்களை குறிவைத்து நூதன முறையில் வங்கி மேலாளர்களுடன் சேர்ந்து இடைத்தரகர்கள் மூலமாக பார்ட்னர்ஷிப் கம்பெனி ஆரம்பித்து சொத்துக்களை மீட்பதோடு தொழில் அதிபர்கள் ஆக்கிவிடுவதாக கூறி வங்கியில் கடன் பெற்று சுமார் ரூ.300 கோடி வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருப்பூர் மற்றும் ஈரோடு, கோவை பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கோடிக்கணக்கில் வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்த வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து பதறிப்போனவர்கள் வங்கிக்கு சென்று விசாரித்தபோது தங்கள் பெயரில் மோசடியாக கடன் பெற்றிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் கோவையை சேர்ந்த குமரேசன், சத்தியமூர்த்தி, உமா மகேஷ்வரி, திருப்பூரை சேர்ந்த ரத்தினசாமி, பழனிச்சாமி மற்றும் ஈரோடு விஜயமங்கலத்தை சேர்ந்த ரங்கநாயகி உள்ளிட்ட ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார், சகோதரர் விஜயகுமார், பிரவீனா, ராகுல்பாலாஜி, தமிழரசன், உதயகுமார், சரவணன், ஜெகநாதன், வங்கி பொது மேலாளர் மதன் மோகன் உள்ளிட்டோர் மீது பல்லடம், திருப்பூர், ஈரோடு காவல் நிலையத்தில் ஏராளமான புகார்களை பாதிக்கப்பட்டவர்கள் அளித்தனர்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு பல்லடம் காவல் துறையினர் சிவக்குமாரையும், பிரவீனாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் மேற்படி சிவக்குமார், பிரவீனா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து கடமையை நிறைவேற்றிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். ஆனால் இழந்த சொத்துக்கள் இதுவரை மீட்கப்படாது பாதிக்கப்பட்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் மோசடியில் ஈடுபட்ட சிவக்குமார், பிரவீனா ஆகியோர் தற்போது ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விஜயகுமார், ராகுல்பாலாஜி உட்பட அனைவரும் சுதந்திரமாக வெளியே நடமாடி வருகின்றனர்.

மேலும் சிவக்குமார், விஜயகுமார் ஆகியோர் ஆந்திரா மாநிலத்தில் இருந்து நூல் வாங்கி வியாபாரம் செய்த வகையில் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பல மாதங்களாக காவல் நிலையத்திற்கு நடையாய் நடந்து நம்பிக்கை இழந்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். அப்பாவிகளான தங்களை ஏமாற்றி ரூ.300 கோடி அளவிற்கு மோசடி செய்த வழக்கில் வங்கிகள் மற்றும் வங்கி மேலாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் சி பி சி ஐ டி போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நிதியரசர், பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தீவிர விசாரணையை 45 நாட்களுக்குள் முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனிடையே வங்கி அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு தாங்கள் இழந்த சொத்துக்களை மீட்டுத்தர பொதுமக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button