தமிழகம்

குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. அமைச்சரே அடுத்த மாசம்னு சொல்லிட்டாரா ?.!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கேட்டு டாஸ்மாக் விற்பனையாளர் கூலித்தொழிலாளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தில் செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ளது 1830 எண் கொண்ட டாஸ்மாக் கடை. பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இப்பகுதியில் செயல்பட்டுவரும் கடையை மூடக்கோரி வரும் 8 ஆம் தேதி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 அடி தொலைவில் குடியிருப்புக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்த பகுதியில் செயல்பட்டுவரும் மேற்படி டாஸ்மாக் கடைக்கு சரக்கு வாங்க வந்த கூலித்தொழிலாளியிடம் குவாட்டருக்கு ரூ. 10 அதிகமாக விற்பனையாளர் கேட்டுள்ளார். அதற்கு தொழிலாளி பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சரே பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்க கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என கேட்டார். அதற்கு டாஸ்மாக் கடை விற்பனையாளர் கூறும் போது அமைச்சர் சொன்னது அடுத்த மாசத்தில் இருந்து தான் வாங்க கூடாது என கூறியிருப்பதாக கூறி கொடுத்த குவாட்டர் பாட்டிலை வாங்கி வைத்துகொண்டார்.

பின்னர் தொழிலாளி வாக்குவாதத்தில் ஈடுபடவே ஒரு கட்டத்தில் விற்பனையாளர் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். அதன்பிறகு சம்பவம் குறித்து பேசிய வாடிக்கையாளர் அமைச்சரே கூலித் தொழிலாளியின் உடம்பு வலிக்கு குடிப்பதாக ஆறுதல் வார்த்தை கூறியிருக்கும் நிலையில் டாஸ்மாக் ஊழியர் அடாவடியாக நடந்துகொள்வதாக வேதனை தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button