விமர்சனம்

காதலுக்கு எதிராக கட்சி தொடங்கிய காமெடி நடிகர் ! “ராயர் பரம்பரை” விமர்சனம்

சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், ராம்நாத் இயக்கத்தில், கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “ராயர் பரம்பரை”.

கதைப்படி… கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன் புதூரில் காதலுக்கு எதிராக கட்சி ஆரம்பித்து அதற்கு தலைவராக இருந்து வருகிறார் மொட்டை ராஜேந்திரன். இதன் பொதுச்செயலாளராக கிருஷ்ணா மற்றும் நான்குபேர் இந்தக் கட்சியில் இருக்கிறார்கள். ஊரில் யார் காதலித்தாலும் அவர்கள் காதலைப் பிரிப்பது தான் இவர்களது தலையாயப் பணி.

அந்த ஊரின் தாதாவாக ராயர் ( ஆனந்த்ராஜ் ) இருக்கிறார். இவரது மகள் சரண்யாவுக்கு தான் பார்க்கும் பையனுக்குத்தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்கிற மனநிலையில் இருந்து வருகிறார். இவரது தங்கை காதலித்து ஒருவருடன் ஊரைவிட்டு ஓடிப்போனதால் ஊரில் யார் காதலித்தாலும் இவருக்கு பிடிக்காது. பருவமடைந்த இளைஞர்களை ஊரைவிட்டு வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் அளவுக்கு காதல் மீது ராயருக்கு வெறுப்பு. இந்நிலையில் இவரது மகள் சரண்யாவின் ஜாதகப்படி அவர் காதலித்து தான் திருமணம் செய்து கொள்வார் என்கிறார் ஜோசியர் மனோபாலா.

பின்னர் ராயரின் மகள் ஒருவரை காதலித்து, அவருடன் ஊரைவிட்டு ஓடிப்போவதாகவும் ராயருக்கு தகவல் வருகிறது. உடனடியாக தன்  சகாக்களை அழைத்துக்கொண்டு தேடிப் போகிறார். அதன்பிறகு ஓடிப்போன மகளை கண்டுபிடிதாரா ? மகளின் விருப்பப்படி அவரது காதலை ஏற்றுக்கொண்டாரா ? அல்லது வேறு பையனுக்கு திருமணம் செய்து வைத்தாரா ? என்பது மீதிக்கதை….

சில வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ணாவை இந்தப் படத்தின் மூலம் திரையில் காணமுடிந்தது. அவரது திறமைக்கு இந்தக் கதை தேவையா என நினைக்கத் தோன்றுகிறது. அவரது முந்தைய படங்களில் இவரது நடிப்பை உணர்ந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார். கதாநாயகி சரண்யா தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் ஆனந்த்ராஜ், கே.ஆர். விஜயா, மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன், பாவா லட்சுமணன் உள்ளிட்ட பிரபலங்கள் இருந்தும் அவர்களை இயக்குனர் சரியாகப் பயன்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கலாம். மற்றபடி நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button