தமிழ்நாட்டின் குரலை ஒடுக்க நினைக்கும் பாஜக ! கருப்பு கொடி ஏற்றி போராட முதல்வர் அழைப்பு !

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தொகுதி மறுசீரமைப்பு சம்பந்தமாக ஒன்றிய பாஜக அரசு புதிய சட்ட திருத்தம் கொண்டு வர உள்ளதை அடுத்து, தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே வீடியோ வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதனையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,“Delimitation” என்ற பெயரில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்கிடும் வகையில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரவுள்ள கருப்புச் சட்டத்துக்கு எதிராக நாளை (16.4.2026) தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏந்துவோம்.
“Delimitation என்ற பெயரில், தனது லிமிட்டைத் தாண்டி, பா.ஜ.க. அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது ! நாளை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வரப் போகும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில், தமிழ்நாட்டில் அனைவரும் நம்முடைய வீட்டில் கருப்புக் கொடியை ஏற்றுவோம். கருப்புச் சட்டத்தை எதிர்த்து நம் எதிர்ப்பின் அடையாளமாக, கருப்புக் கொடியை ஏற்றுவோம். இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துக் கொண்டு போகும், எதேச்சதிகார பா.ஜ.க. அரசுக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றுவோம்.
அனைத்து கழக மாவட்டங்களிலும் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை என பட்டித்தொட்டி கிராமம் முதல் மாநகரங்களில் உள்ள அனைத்து இல்லங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் நாளை (16.4.2026) இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துக் கொண்டு போகும், எதேச்சதிகார பா.ஜ.க. அரசுக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
தமிழ்நாடு போராடும் ! தமிழ்நாடு வெல்லும் ! வெல்வோம் ஒன்றாக ! என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




