பல்லடம் தொகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் அனல் பறக்க பிரச்சாரம் செய்து, ஓய்ந்து போன வேட்பாளர்கள் ! தொகுதியில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போவது யார் ?.!

திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நாளை நடைபெறவுள்ள நிலையில், 116 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தாராபுரத்தில் 9 வேட்பாளர்களும், காங்கேயம் 15, திருப்பூர் (தெற்கு) 24, வேட்பாளர்களும், அவிநாசி 14 வேட்பாளர்களும், திருப்பூர் (வடக்கு) 15, பல்லடம் 15, உடுமலை 11, மடத்துக்குளம் 13, என மொத்தமாக 116 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனிடையே நாளை வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில் 8 சட்டமன்ற தொகுதி நிலவரம் குறித்த விரிவான தகவல்.
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கா. செல்வராஜ், அதிமுக சார்பில் கே.பி. பரமசிவம், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ராம்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழினியன் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இரண்டு பெரிய கட்சிகள் நேரடியாக களம் காண்கிறது. பல்லடம் பகுதியில் தலையாய பிரச்சனை விசைத்தறி கூலி உயர்வு பிரச்சனை, கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கான கூலி உயர்வு பிரச்சனை, போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கடந்த சில மாதங்களாக மாநகராட்சி பகுதிகளில் இருந்து ஏராளமான குப்பைகளை இடுவம்பாளையம், சின்னக்காளிபாளையம் கிராமங்களில் விவசாய நிலங்களுக்கு நடுவே கொட்டுவதால், விவசாய தொழில் பாதிக்கப்படுவதாக கூறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனிடையே போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தது ஒட்டுமொத்த கிராம மக்கள் மத்தியில் திமுக மீது எதிர்ப்பு நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இனாம் நிலத்தில் குடியி ருத்து வருபவர்கள் மீது நடவடிக்கை, விவசாய சங்கத்தை சேர்ந்த ஈசன் முருகுசாமி மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தது விவசாயிகளிடையே திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர். திமுக வேட்பாளர் கா. செல்வராஜ் திருப்பூர் மாநகராட்சியின் முதல் மேயர் மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கா. செல்வராஜ் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுப்பட்டார். பல்லடத்த அடுத்த ஊஞ்சப்பாளையம் கிராமம் செல்வராஜின் சொந்த ஊர்.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.பி. பரமசிவம் ஏற்கனவே பல்லடம் தொகுதியில் வெற்றிபெற்றார். இரண்டாவது முறையாக போட்டியிடும் பரமசிவம் தொகுதிக்கு நன்கு பரிட்சையான முகம். 1972 ஆண்டு முதல் தற்போது வரை அதிமுக 9 முறை வெற்றிபெற்று பெற்றுள்ளது. திமுக இரண்டு முறை வெற்றிபெற்றது. மேலும் வே.கள்ளிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வலையபாளையத்திற்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக வேட்பாளர் கா. செல்வராஜிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பிரசாரத்தை பாதியில் முடித்துக்கொண்டு திரும்பினார்.

மேலும் குப்பைபிரசனையில் பொதுமக்கள் திமுக மீது கடும் அதிர்ப்தியில் உள்ளனர். பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பாசாபாளையம் பகுதியில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பையும் மீறி எரியூட்டு மயானம் அமைத்தது நகர் பகுதியில் கடும் எதிர்ப்புக்கு நடுவே சமூக ஆர்வலர் அண்ணாதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் அதிமுகவை பொறுத்த வரை முன்னாள் சட்டமன்ற உ றுப்பினர் கே. பி. பரமசிவம் அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜிக்கு வாய்ப்பளிகாதது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு கட்சி வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலில் அனல் பறக்கும் பிரசாரம் செய்தும் பொதுமக்களிடையே எடுபடவில்லை.
பல்லடம் சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருந்து வரும் நிலையில், புதிதாக களம் காணும் தமிழக வெற்றிக்கழகம் பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தவெக பெரு வாரியான வாக்குகளை அறுவடை செய்யும் என்பதில் ஐயமில்லை. பல்லடத்தில் திமுக, அதிமுக இரு கட்சியும் சம நிலையில் உள்ளது . இதில் எந்த கட்சியின் ஓட்டுவங்கியை தவெக பிரிக்கப்போகிறது என்பது மே 4 ஆம் தேதி தெரிய வரும்.




