சரத்குமார் கேரியரில் மணிமகுடமா ?.! “போர் தொழில்”
அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட், இ-4 எக்ஸ்பரிமென்ட்ஸ், எப்ரியஸ் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளிவந்த படம் “போர் தொழில்”
கதைப்படி… திருச்சியில் ஒரே மாதிரியான முறையில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைக்கான காரணத்தை கண்டறிய காவல்துறை அதிகாரி சரத்குமார் நியமிக்கப்படுகிறார். அவருக்கு உதவியாக புதிதாக காவலர் பணியில் சேர்ந்த அசோக் செல்வன் நியமிக்கப்படுகிறார். தொழில்நுட்ப உதவியாளரக நிகிலா விமலும் அவர்களுடன் செல்கிறார். இவர்கள் வழக்கு விசாரணை செய்யும் போது… மேலும் இரண்டு கொலைகள் அதே முறையில் நடக்கிறது.
இந்த தொடர் கொலைகளுக்கு என்ன காரணம் ? யார் கொலை செய்தது ? சரத்குமார், அசோக் செல்வன் கூட்டனிக்கு என்ன ஆனது ? என்பது மீதிக்கதை…
சரத்குமார் இதுவரை காவல்துறை அதிகாரியாக எத்தனை படங்கள் நடித்திருந்தாலும், க்ரைம் அதிகாரியாக மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி திரையுலக ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். காவல்துறையில் உயர் அதிகாரிகளிடம் சாதாரண காவலர்கள் வேலை செய்வது எவ்வளவு சிரமம் என்பதையும், திறமையை நிரூபித்து அதே அதிகாரியிடம் பாராட்டு பெறுவதையும் இயக்குனர் சிறப்பாக தனது திரைக்கதையில் நிரூத்துள்ளார். இதுபோன்ற கதாபாத்திரம் அசோக் செல்வனுக்கு புதியதாக இருந்தாலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். நிகிலா விமலும், மறைந்த நடிகர் சரத் பாபுவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை போன்ற தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. இயக்குனருக்கு “போர் தொழில்” முதல் படம் என்றாலும், படக்குழுவில் இடம்பெற்ற அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கி சிறப்பான படைப்பை கொடுத்திருக்கிறார்.