சினிமா

படத்தின் உரிமையை மோசடியாக OTT-க்கு விற்பனை செய்த திருட்டுக் கும்பல் !

பிரபல தொழிலதிபரும், திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதம் பாபா சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் அலுவலகத்தில், எனது அனுமதியில்லாமல் “ஆன்டி இந்தியன்” திரைப்படத்தை கேலக்ஸி ஓடிடி ( Galaxy OTT ) தளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளனர். இந்த மோசடிக் கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, தண்டனை பெற்றுத் தருமாறு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக நம்மிடம் பேசுகையில்… எனது மூன் பிக்சர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரபல சினிமா விமர்ச்சகர் புளூசட்டை மாறன் இயக்கத்தில் 10.12.2021 ல் வெளிவந்த “ஆன்ட்டி இந்தியன்” திரைப்படத்தை நான் டிஜிட்டல் உரிமம் விற்காதபோது எனது பட டிஜிடல் வடிவத்தை திருடி முறைகேடாக galaxyott.in
என்ற ott தளத்தில் வெளியிட்டு எனக்கும் எனது நிறுவனத்திற்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

அது சம்பந்தமாக கேலக்ஸி OTT  சதாசிவ மூர்த்தி என்பவரிடம்   பேசியபோது, அவர் கேசவ் சினிமாஸ் என்ற நிறுவனத்தில் உரிமம் வாங்கியதாக கூறினார். மேற்படி கேசவ் சினிமாஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசியபோது அருண் வீடியோஸ் சுப்பிரமணியிடம் நான் உரிமம் பெற்றுள்ளேன் என்று கூறினார்.
அந்த நபரை தொலை பேசியில் அழைத்து கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பேசி சரியான பதில் கூறவில்லை.

இந்நிலையி்ல் குற்றம் செய்தவர்கள் சார்பாக ஜாகுவார் தங்கம் எனது தொலைபேசியில் வந்து அவர்கள் எனது கில்டு சங்க உறுப்பினர்கள் குற்றம் தவறுதலாக நடந்து விட்டது அவர்களை மன்னித்து விட்டு விடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார். இக்குற்ற செயலில் ஒரு கூட்டமே உள்ளதாக அறிகிறேன்.

இது தொடர்பாக சைபர் கிரைமிலும் புகார் செய்துள்ளேன் இதனால் எனது “ஆன்ட்டி இந்தியன்” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்க முடியாத அளவுக்கு எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. மேலும் என் படம் தவிர இன்னும் பல தயாரிப்பாளர்களின் படங்களும் இதே போன்று உரிமம் வாங்காமல்
ஒளிபரப்பியுள்ளாதாக அறிகிறேன்.

இயக்குனர், தயாரிப்பாளர் ஆதம் பாபா

நான் எனது படத்தின் பிரதியை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைத்திருந்த போதும் எப்படி திருடினார்கள் என்பதையும் கண்டுபிடித்து தருவதுடன், உடனடியாக மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து, மேலும் இது போன்ற குற்றம் நடக்காமல் மேற்ப்படி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளதாக கூறினார்.

மேலும் பிரபல திரைப்பட இயக்குனர் அமீர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “உயிர் தமிழுக்கு” என்கிற படத்தை ஆதம் பாபா இயக்கி, தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button