மாவட்டம்

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குடியரசு தின சாதனை நிகழ்வு !

The Global Raising Challengers Organization (TGRCO) TGRCO- வின் நிறுவனர், 14 வயதான சாரிகா ஜெகதீஷ், “World Book Of Records – London” உடன் இணைந்து ஒரு உலக சாதனையை முயற்சித்துள்ளார். 76 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் தேசியக்கொடி உடையுடன் ரேம்ப் வாக் செய்யும் நிகழ்ச்சி, சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ள மவுண்ட் ஏ.ஆர்_II காவல் திடலில் நடைபெற்றது.

“திரங்கா – மூவர்ணக் கொடிக்கு மரியாதை” என்ற தீமோடு நடைபெற்ற இந்த நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று “இந்தியத் தேசிய கொடியின் நிறத்தில் உடைகள் அணிந்து, அமைதி மற்றும் ஒற்றுமைக்காக கைதட்டும்  மாபெரும் திரங்கா இன்க்ளூசிவ் ராம்ப் வாக் செய்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்நிகழ்வினை லண்டன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம்  அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதிகள் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி உதவிக்காக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் குளோபல் ரைசிங் சேலஞ்சர்ஸ் நிறுவனர் சாரிக்கா ஜெகதீஷ், சிறப்பு விருந்தினராக  துணை காவல் கண்காணிப்பாளர் பி. குமரன், ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத் வடக்கு மண்டல செயலாளர் திருமதி கீதா பிரியா, உலக சாதனைப் புத்தகத்தின் (லண்டன்) முடிவாளராக அங்கிதா ஷா, மிஸ் டீன் இன்டர்நேஷனல் சந்த்யா சத்தநாதன், பிரபல ஃபேஷன் டிசைனர் ஜோஷுவா கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button