தமிழகம்

குப்பைகளை அகற்ற டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்த மாநகராட்சி அலுவலர் !.?

ஆவடி மாநகராட்சி சார்பில் குப்பைகளை அள்ளுவதற்கு டெண்டர் விட்டதில் சுகாதார அலுவலர் முறைகேடு செய்து தகுதியில்லாத நிறுவனத்திற்கு, பல லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் முடிவுசெய்து, அதற்கான நிர்வாக அனுமதியை அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொண்ணையன் வழங்கியிருந்தார். அதன்படி ஆவடி மாநகராட்சியில் குப்பைகளை அகற்றுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரி விண்ணப்பிக்க விருப்பமுள்ள ஒப்பந்ததாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

அதன்படி சிட்டி கிளீன், கிரீன் வாரியர், ஶ்ரீ நிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் ஆகிய மூன்று நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதனை அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடு முடிவடைந்ததும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் ஆய்வுசெய்து முன்அனுபவம் இல்லாத நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு, தகுதியான நிறுவனங்களில் குறைவான விலையில் ஒப்பந்தம் கோரியவர்களுக்கு ஒப்பந்தம் வழங்குவது வழக்கம்.

ஆனால் ஒப்பந்த தேதி காலக்கெடு முடிவடையும் முன்னரே ஆவடி மாநகராட்சியின் சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் ஒப்பந்தம் கோரிய விண்ணப்பத்தை யாருக்கும் தெரியாமல் திறந்து பார்த்து, தனக்கு வேண்டப்பட்ட ஶ்ரீநிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் கவரை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற இரண்டு நிறுவனங்களின் சார்பில் ஒப்பந்தம் கோரி விண்ணப்பித்த கவரை வெளியே எடுத்து கிழித்துப் போட்டுவிட்டதாக பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் சார்பில் புகார் கூறியுள்ளனர்.

ஆவடி மாநகராட்சியின் சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தேர்வுசெய்த ஶ்ரீநிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் மீது ஏற்கனவே மாநகராட்சி ஆணையரிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். மேற்படி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குவதாக முன்கூட்டியே சுகாதார அலுவலர் பல லட்சங்களை முன்பணமாக வாங்கியுள்ளாதால்தான் அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைப்பதற்காக இவ்வளவு திரைமறைவு வேலைகளையும் இந்த அலுவலர் செய்துள்ளதாக ஆவடி மாநகராட்சியில் பேசிக்கொள்கிறார்கள்.

கே. தர்ப்பகராஜ் ஐஏஎஸ்

குப்பைகளை அள்ளுவதற்கு டெண்டர் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள் அனைத்தும் மாநகராட்சி ஆணையர் கே. தர்ப்பகராஜ் ஐஏஎஸ் கவனத்திற்கு தெரிய வந்துள்ளதாம். இவர் நேர்மையான அதிகாரி என்பதால் சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தேர்வுசெய்த ஶ்ரீநிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கும் கோப்பில் கையொப்பம் இடாமல் நிறுத்தி வைத்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் ஆவடி மாநகராட்சியில் சுகாதார அலுவலராக ஆல்பர்ட் அருள்ராஜ் வந்ததிலிருந்து இவர் மேற்கொண்ட அனைத்து கோப்புகளையும் ஆணையர் ஆய்வு செய்தால், இவரது முறைகேடுகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும். மேலும் இந்த அதிகாரி ஏற்கனவே பணியாற்றிய திருவேற்காடு நகராட்சியில் பல முறைகேடுகள் செய்து பணம் சம்பாதித்திருப்பதாகவும் , இவர்மீது புகார்கள் கூறுகிறார்கள்.

மாநகராட்சி ஆணையர் கே.தர்ப்பகராஜ் ஐஏஎஸ் குப்பைகளை அகற்றுவதற்கு சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் வழங்கிய ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, நேர்மையான அதிகாரி முன்னிலையில் மீண்டும் டெண்டர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button