பாலியல் வழக்கு, கணவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய மனைவி ! “பருந்தாகுது ஊர் குருவி” விமர்சனம்
லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனம் தயாரிப்பில், தனபாலன் கோவிந்த ராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூசோ, விவேக் பிரசன்னா, காயத்ரி ஐயர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பருந்தாகுது ஊர் குருவி”
கதைப்படி… நடிகை யாமினி ( காயத்ரி ஐயர் ) மாறன் ( விவேக் பிரசன்னா ) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். நடிகை யாமினி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாகிறார். தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மறுக்கிறார். இந்நிலையில் தனது கணவர் மாறனை மலைப்பிரதேசத்தில் தங்கியிருக்குமாறு அனுப்பி வைக்கிறார். அங்கு மாறன் மீது நான்குபேர் கொண்ட கும்பல் கொலை வெறித்தாக்குதல் நடத்துகிறது. பின்னர் மாறன் இறந்து விட்டதாக செல்கின்றனர்.
அந்த மலைக்கிராமத்தில் சின்னச்சின்ன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு தானக முன்வந்து காவல் நிலையத்தில் ஆஜராகும் ஆதி ( நிஷாந்த் ரூசோ ) தினசரி கையெழுத்து போடுவதற்காக ஒரு இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு காவல் நிலையத்திற்கு வருகிறார். அப்போது உதவி ஆய்வாளர் போஸ் ( கோடங்கி வடிவேலு ) ஆதி மீது தாக்குதல் நடத்தி காத்திருக்குமாறு மிரட்டுகிறார். பின்னர் காட்டுப்பகுதியில் ஒரு கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வருகிறது.
உதவி ஆய்வாளருக்கு சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்வதற்கு வழி தெரியாது என்பதால் அந்தப் பகுதியை நன்கு அறிந்த ஆதியை அழைத்துக்கொண்டு போகிறார். போலீஸ் மீதுள்ள கோபத்தில் நீண்ட நேரம் காட்டுப்பகுதியில் உதவி ஆய்வாளர் போஸை அலையவிட்டு கடைசியில் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆதி மீது கோபத்தில் இருந்த உதவி ஆய்வாளர் போஸ் இவனை பழிவாங்கும் நோக்கத்தில் பிணத்துடன் ஆதியை கைவிலங்கிட்டு காவல் நிலையத்திற்கு போண் செய்வதற்காக மேடான பகுதிக்குச் செல்கிறார்.
பின்னர் கீழே இறங்கிவந்து பார்க்கும்போது இறந்து கிடந்த நபரையும், திருட்டுப்பய ஆகியவையும் காணவில்லை என தேடி அழைந்து, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கிறார். இறந்து கிடந்த நபரும், ஆதியும் என்ன ஆனார்கள் ? மாறன் எதற்காக, யார் தூண்டுதலால் தாக்கப்படுகிறார் ? என்பது மீதிக்கதை…
மாறன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விவேக் பிரசன்னா இதுவரை நடந்துள்ள படங்களைவிட இந்தப் படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
திருடன் ஆதியாக நடித்துள்ள நிஷாந்த் ரூசோ உயரமான காட்டுப் பகுதியில் மாறனை சுமந்து சென்று தனது கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
யாமினி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள காயத்ரி ஐயர் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர்.
ஊருக்குள் சின்னச்சின்ன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒருவன், தன்னைவிட பலசாலிகளிடம் போராடி வெற்றி பெறுவதே “பருந்தாகுது ஊர் குருவி”