தமிழகம்
மாற்றுத்திறனாளிக்கு பிரதிநிதித்துவம் வழங்கிய கணியூர் பேரூராட்சி

தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க சட்டம் இயற்றி அரசாணை வெளியிட்டதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி கலாவதி என்பவர் நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2023 ஆண்டு நகர்புற அமைப்பு விதி 153 A ( உட்பிரிவு 5 ) ன் படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இயக்குநர் உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சியில் மா. கலாவதி என்கிற மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினராக பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் முன்னிலையில், செயல் அலுவலர் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.


