சினிமா

உண்மை சம்பவத்தை தத்ரூபமாக விளக்கும் “ஜோதி” படத்தின் “ஆரிராரோ” பாடல் வெளியீடு

“ஜோதி” திரைப்படத்தின் “ஆரிராரோ” என்ற இரண்டாவது பாடல் வெளியீட்டின் சிறப்பு நிகழ்ச்சிக்காக ரேடியோ சிட்டி  FMல் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது அங்கு வந்திருந்த காவல்துறை DSP, காவல் துறைக்கே சவாலான கடலூரில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவமாகிய குழந்தை திருட்டை வைத்து, அதை முழுநீள திரைப்படமாக எடுத்ததற்கு படக்குழுவினரை மிகவும் பாராட்டி, இதுபோன்ற உண்மை சம்பவங்களை சமூக விழிப்புணர்வுக்காக மேலும் பலபடங்கள் எடுக்க வேண்டும் என்று  ஊக்குவித்தார்.

நிகழ்ச்சியின் போது இயக்குனர் “AV கிருஷ்ண பரமாத்மா” கூறியதாவது.
“சென்றவாரம் “போவதெங்கே” என்ற காதல் பாடல் வெளியானது அதை தொடர்ந்து “ஆரிராரோ” என்ற அப்பாவுக்கும் மகளுக்குமான உறவை சொல்லும் விதமாக அமைந்துள்ள இரண்டாம் பாடலை இப்போது வெளியிடுகிறோம். இப்பாடல், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையாலும் கார்த்திக் நேத்தா வரிகளாலும், பல்ராமின் குரலாலும் மிகவும் அழகாக வந்திருக்கிறது. குழந்தைகளை பெற்ற அப்பாக்களும், அப்பாக்களை போற்றும் குழந்தைகளுக்கும் இப்பாடல் திரும்ப திரும்ப கேட்க கூடியதாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூக பிரச்சனைக்கு தீர்வாகவும், ரொம்ப எமோஷனலாகவும், திரில்லராகவும் வந்திருக்கிறது. முன்னோட்ட காட்சியை பார்த்தவர்கள் அனைவரும்  கண்கலங்கி இப்படியொரு படம் வருவது பெரியவிசியம் என பாராட்டினர். இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்றார்.

தயாரிப்பாளர் “SPராஜாசேதுபதி” கூறியதாவது.
“எனது சொந்த ஊரான கடலூரில் நடந்த உண்மை சம்பவம் தான் இந்த படத்தின் கரு. அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்தையும், இதன் பின்னணியும் ஆராயும்போது மனசு ரொம்ப பாதித்தது.  திரைப்படக் கல்லூரியில் படித்த AV கிருஷ்ண பரமாத்மா எமோஷனல் சார்ந்த ஸ்கிரிப்டை சிறப்பாக கையாளுவார், அவர் இயக்கிய குறும்படத்தில் அதை பார்த்திருக்கிறேன். அதனால் இந்த சம்பவத்தை படமாக்க இவர் சரியாக நபர் என்று நம்பினேன். DSP சாந்தியை சந்தித்து இதை சார்ந்த  தரவுகளை ஆராய்ந்து விறுவிறுவென வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் என்ன விறுவிறுப்பு இருந்ததோ அதே விறுவிறுப்பை கமர்ஷியலாக முழுநீள திரைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னோட்ட காட்சியில் படத்தை பார்த்த பார்வையாளர்களுக்கு இந்த சம்பவத்தின் தாக்கம்  அப்படியே சென்றடைந்திருக்கிறது.

இதுபோன்ற படங்கள் அதிகமாக வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். நான் படத்தொகுப்பாளராக பணியாற்றிய முதல் படம் சதுரங்க வேட்டை படத்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் மேற்கோள் காட்டி ஒரு வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனால் இதுபோன்று சமூக பிரச்சனை சார்ந்த படங்கள்தான் எடுக்க வேண்டும் என தீர்க்கமாக இருந்த எனக்கு பார்வையாளர்கள் இப்படி சொன்னது எனக்கு மனநிறைவு அளிக்கிறது. “ஜோதி” படம் வரும் ஜூலையில் வெளியாக இருக்கிறது என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button