சினிமா

சைக்கோ, த்ரில்லர் கதையில் உருவான “லாக்” திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

லாக்” திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் புதுமுகங்கள். இதுவரை யாரும் யோசிக்காத வகையில் புதிய கோணத்தில் க்ரைம் சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது “லாக்” திரைப்படம். இப்படத்தை ஏற்கனவே வெளிவந்த “அட்டு” படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற ரத்தன் லிங்கா இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் ரத்தன் லிங்கா பேசும்போது..‌. இந்தப் படம் இன்றைய காலத்துப் பெண்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி எடுத்துக் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. ‘இந்த உலகத்தில் உன்னைக் காப்பாற்ற யாராலும் முடியாது. நீயே தான் உன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் ‘ என்கிற கருத்து அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு இருந்து தன்னைக் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று புரிய வைக்கும்

எனது ‘அட்டு’ படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆனாலும் இன்னும் அதைப் பற்றி பேசுபவர்கள் பின்பற்றுபவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள் .இது “அட்டு” படத்தைப்போல் நான்கு மடங்கு பெரிய அளவிலான படமாக இருக்கும். இந்தப் படம் சினிமாத்தனம் இல்லாத படம். சிறிதும் சினிமாட்டிக் இல்லாமல் இயல்பாக இருக்கும் என்கிற உத்திரவாதத்தை என்னால் தரமுடியும். கதை நிகழும் இடங்களும் மிகவும் யதார்த்தமாக உண்மைக்குப் பக்கத்தில் இருக்கும்.

இப்படத்தை  பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் , RPG போனோபென் குழுமம், சக்திவேல் பிக்சர்ஸ்  ஆகியோர் இணைந்து  தயாரித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button