சைக்கோ, த்ரில்லர் கதையில்… போலீஸ் கமிஷனர் (ex) , ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் “ஒயிட் ரோஸ்”

ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் “ஒயிட் ரோஸ்” திரைப்படத்தினை அறிமுக இயக்குனர் ராஜசேகர் என்பவர் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ 9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பாளர் ரூஸோ ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் தொடக்கவிழா சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் எஸ். தாணு, நடிகர் ஆரி உள்ளிட்ட திரையிலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்… அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி சைக்கோ த்ரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையாக உருவாகியிருக்கிறது என்றார்.

சமீபத்தில் வெளியான விசித்திரன் திரைப்படம் ஆர்.கே. சுரேஷை சிறந்த நடிகன் என்கிற அந்தஸ்திற்கு உயர்த்தியது. அந்தப் படத்திலும் மருத்துவ மனைகளில் நடைபெறும் முறைகேடுகளை வெளிப்படுத்தும் விதமாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல் இந்தப் படமும் ஆக்ஷன் த்ரில்லர் படம் என்பதால் ஆர்.கே.சுரேஷ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை கயல் ஆனந்தி, தயாரிப்பாளர் ரூஸோ, முன்னாள் காவல்துறை அதிகாரி ஜான் கிட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.