மாவட்டம்

திருப்பூரில் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் !

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்தி, விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றிட அனைத்துத்துறை அலுவலர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, 30.01.2026 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாக அறை எண்: 240 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்  கூட்டம் நடை பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.  விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்களை வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து நேரடியாக தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம்  விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (MIMIS PORTAL) பதிவு செய்து கொள்ளவும், வேளாண் –  உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button