பழனியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சக்திவேல் என்பவர் மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றுள்ளனர்.
வாகனம் திருடுபோனதை அடுத்து சக்திவேல் பழனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பழனி டிஎஸ்பி தனஞ்செயன் மேற்பார்வையில் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். வாகன திருட்டில் ஈடுபட்ட தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த குருசாமி மற்றும் அவரது மகன் ஈஸ்வரன் ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் புகார் அளித்த சுமார் ஒரு மணி நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடடயவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த பழனி நகர் போலீசாரை அப்பகுதியினர் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
– சாதிக் பாட்சா