சினிமா

“அறம்” தவறியவர் அறம் பற்றி பேசுவதா ? நயன்தாராவின் சினிமா வாழ்வுக்கு முடிவு கட்டும் தயாரிப்பாளர்கள் சங்கம் !

நடிகை நயன்தாரா தனுஷ் மனசாட்சிக்கு விரோதமாக அறம் தவறி நடப்பதாகவும், தனது ஆவணப்படத்திற்கு தான் நடித்த நானும் ரவுடிதான் படத்தின் கிளிப்பிங்சை பயன்படுத்த என் ஒ சி கொடுக்கவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சினிமா பிரபலங்களை தொடர்பு கொண்டு பேசிய போது… நானும் ரவுடிதான் படத்தை தயாரித்தது தனுஷின் நிறுவனம். அந்தப் படம் சம்பந்தமான அனைத்து உரிமைகளும் தயாரிப்பாளரான தனுசுக்கு மட்டும் தான் சொந்தம். அந்த படத்தின் சில பாகங்களை நயன்தாரா பயன்படுத்துவது தவறு, அந்த படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டுதான் நடித்துள்ளார். அதே படத்தில் இப்பொழுது நயன்தாராவின் கணவராக இருக்கும் விக்னேஷ் சிவன் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். அவருக்கும் தனுஷ் நிறுவனம் சம்பளம் வழங்கியுள்ளது. ஒரு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்குத்தான் அந்த படம் சம்பந்தமான அனைத்து உரிமைகளும் இருக்கிறது.

இவ்வாறு இருக்கையில் அந்த படத்தை தான் பயன்படுத்த நினைத்தது நயன்தாரா செய்த பெரும் தவறு, இந்நிலையில் நாங்கள் இரண்டு வருடமாக அனுமதிக்காக காத்திருந்தோம், எங்களை அவர் அழைக்களித்தார் என பல்வேறு வக்கிரமான வார்த்தைகளை பயன்படுத்தி நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருப்பது தவறான ஒன்றாகும். நயன்தாரா தனது ஆவணப்படத்தை நெட் பிலிக்ஸ் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இவரது வியாபாரத்திற்கு தனுஷ் தயாரித்த படத்தின் சில பாகங்களை பயன்படுத்துவதற்கு, தனுஷ் நஷ்டைடு கேட்பதில் தவறில்லையே, இவர் நடித்த அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் என்ன பாடுபட்டார் என்பதில், நயன்தாராவின் அறம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே !

பல கோடி சம்பளம் பெற்றுக்கொண்டு தான் நடிக்கும் படங்களின் விழாக்களுக்கு வராமல், தயாரிப்பாளர்களை அலைக்கழிப்பு செய்பவர் தானே நயன்தாரா, இவர் அறம் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்கிறார்கள்.

மேலும் இவரது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி படத்தின் தலைப்பு, தயாரிப்பாளர் எஸ்எஸ் குமரன் வசம் இருக்கும்போது, தன்னிச்சையாக அந்த தலைப்பை தனது மனைவியின் அதிகாரத்தை பயன்படுத்தி வைத்துக் கொண்டுள்ளார் விக்னேஷ் சிவன் என்கிறார்கள்.

மேலும் நயன்தாரா வசித்துவரும் அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள் கூறுகையில்.. நயன்தாரா வெளியில் கிளம்பும்போது யாரும் குறுக்கே வரக்கூடாது, எந்த வாகனமும் சிறிதுநேரம் வெளியில் கிளம்ப கூடாது என பல கெடுபிடிகளை காவலர்களுக்கு உருவாக்கினார்கள். இவரது மாமியார் முன்னாள் காவல்துறை ஆய்வாளர். அவர் திருச்சியில் மருமகள் பெயரைச் சொல்லி, அரசியல் செல்வாக்கு இருப்பதாகக் கூறி பல்வேறு பஞ்சாயத்துகள் செய்வதாகவும் கூறுகிறார்கள்.

இதெல்லாம் பார்க்கும்போது, நயன்தாராவின் சினிமா வாழ்க்கைக்கு, தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. சில நாட்களில் தயாரிப்பாளர்கள் சங்கம் நல்ல முடிவெடுக்கும் என கூறுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button