சினிமா

நடிகர் விமல் வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும். நீதிமன்றம் உத்தரவு !

நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான “மன்னர் வகையறா” திரைப்படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவரிடம் ரூபாய் 5 கோடி கடனாக வாங்கியிருந்தார். படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறிய விமல், சொன்னபடி கோபியிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் 2020 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார் கோபி. இதனை மழுங்கடிப்பதற்காகவும், பணம் கொடுக்காமல் தப்பிப்பதற்காகவும் கோபி, சிங்காரவேலன் ஆகியோர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், மோசடி புகார் ஒன்றை அளித்தார் நடிகர்விமல்.

இந்நிலையில், விமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த விசாரணையின் முடிவில் விமல் மற்றும் கோபிக்கு இடையே சமரசம் ஏற்பட்டு, 2021 ஆம் ஆண்டு செடம்பர் மாதம் ரூபாய் 3 கோடியை ஓராண்டு காலத்திற்குள் திருப்பித் தருவதாக விமல் சமாதான ஒப்பந்தம் செய்து கொடுத்தார். ஓராண்டு கடந்தும், பணம் கொடுக்காததால் 2022 ஆம் ஆண் டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கோபி. இந்த வழக்கை விசாரித்த விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோபியிடம் உள்ள ஆவணங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ரூபாய் 3 கோடியை 18 சதவீத ெவட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button