தமிழ் நடிகரை ஏமாற்றிய என்.டி.ஆர் குடும்பம்

தமிழ் திரையுலக பிரபலங்களில் பன்முகத் தன்மை கொண்டவர் நடிகர் ராஜ்கிரண். சமீபத்தில் சமூக வலைதளங்கள் அனைத்தும் இவரது குடும்பத்தைச் சுற்றியே இயங்கி வருகிறது. ஏனென்றால் சில தினங்களுக்கு முன் அவரது வளர்ப்பு மகள் ஜீனத் ப்ரியா ஒரு வீடியோ வெளியிட்டு தனது திருமணம், தற்போதைய நிலைமை பற்றி பேசியதோடு வளர்ப்புத் தந்தை ராஜ்கிரண் உதவிய விவரங்களையும் பேசியிருந்தார். இந்த வீடியோ வெளியிலிருந்து தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் இது சம்பந்தமாக பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
பின்னர் அவரது கணவர் ஒரு வீடியோவை வெளியிட்டு, எனது மனைவியின் வீடியோவைப் பார்த்தால் யாரோ பேசவைத்தது போல் தெரிகிறது. நானும் என் மனைவியும் நாங்களாக பிரிந்தோமா அல்லது பிரிக்கப் பட்டோமா என்பதை விரைவில் தெரிவிப்பதாக பேசியிருந்தார்.

இது சம்பந்தமாக நமது குழுவினர் விசாரித்தபோது… முனிஷ் ராஜா, ஜீனத் ப்ரியா இருவருக்கும் ஆந்திராவில் திருமணம் செய்து வைத்ததே அவரது தாயார் லெட்சுமி சிவபார்வதிதானாம். இவர் என்.டி. ராமாராவின் இரண்டாவது மனைவி. இவரிடம் உதவியாளராக இருந்தவர்தான் ராஜ்கிரணின் தற்போதைய மனைவி கதிஜா நாச்சியார் ( பத்மஜோதி ). ஆந்திர அரசியலில் என்.டி.ஆர் குடும்பத்தில் வாரிசு பிரச்சினை எழுந்தபோது பத்மஜோதியிடம் ப்ரியாவை தத்துக் கொடுத்துள்ளார்.
முனிஷ் ராஜா, ஜீனத் ப்ரியா காதல் முகநூல் மூலமாக ஆரம்பித்து தொடர்ந்த நிலையில், இவர்கள் காதலுக்கு ராஜ்கிரண் குடும்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்ததால், ப்ரியாவின் சொந்த தாயாரிடம் பேசி அடைக்கலம் தேடி சென்றுள்ளனர். அங்கு சில மாதங்கள் இருந்த நிலையில், தொழில் செய்வதற்காக மூன்று கோடி தருமாறு லட்சுமி சிவபார்வதியிடம் முனிஷ் கேட்டுள்ளார். அப்போது தேர்தல் சமயம் என்பதால், தேர்தல் முடிந்ததும் தருவதாக சொல்லியுள்ளார் லெட்சுமி சிவபார்வதி.

அதன்பிறகு இருவரும் குடும்பம் நடத்தவே சிரமப்பட்ட நிலையில், ப்ரியாவின் வளர்ப்புத் தாய்தான் உதவியுள்ளார். அவர் இருவரையும் பிரிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் உதவி செய்தாரா என்பது அப்போது தெரியாது. அதன்பிறகு ப்ரியாவின் தாயாரும் இந்த விஷயத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார். அதன்பிறகுதான் இருவரும் பிரிந்ததாக முனிஷ் ராஜா தரப்பிலிருந்து தெரிய வந்தது.
இது சம்பந்தமாக ப்ரியா தரப்பின் விளக்கம், இவர்கள் பிரிவுக்கான உண்மையான காரணம், இதில் பெண் உதவி காவல் ஆய்வாளரின் பங்கு என்ன ? முதல் மனைவி யார் ? இதில் யார்யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்கிற விரிவான செய்தி வருகிற இதழில்…