‘அகவன்’ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தீவிர ரஜினி ரசிகர் என்பதால், அரங்கம் முழுக்க ரஜினி ரசிகர்களால் நிறைந்திருந்தது. இந்த விழாவில், ரஜினியின் பெரிய ரசிகர்களான ராகவா லாரன்ஸ், சின்னி ஜெயந்த், காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன், லொள்ளு சபா ஜீவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில், ரஜினியின் அரசியல் பற்றி வழக்கத்துக்கு அதிகமாகவே பேசப்பட்டது. லொள்ளு சபா ஜீவா பேசுகையில், அரங்கத்துல பெரும்பாலும் அன்புத் தலைவர் ரசிர்கர்கள் இருப்பதால், இது மன்ற விழாவுல பேசுறமாதிரி இருக்குது. ரஜினி சார் அரசியலுக்கு சீக்கிரம் வரணும்னு சொல்றாங்க. சட்டமன்றத் தேர்தல் எப்ப வந்தாலும் வருவார்’’ எனத் தெரிவித்தார்.கராத்தே தியாகராஜன் பேசும்போது, பாக்யராஜின் ‘தாவணிக் கனவுகள்’ படத்துக்கு ஸ்டன்ட் வடிவமைத்த குழுவில் தானும் இடம்பெற்றிருந்த அந்த அனுபவத்தைப் பகிர்ந்தார். மேலும், மதுரை அன்பு பற்றி தயாரிப்பாளர் தாணு குறிப்பிட்டதைப் பகிர்ந்தார். மேலும் அவர்,
தமிழகத்துல சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது. சினிமாவுல இருந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனப் பலர் இருந்தாங்க. அதுபோல, அண்ணன் ரஜினிக்கும் வாய்ப்பு இருக்கு. அதுக்கு சினிமா உலகத்தினர் சப்போர்ட் பண்ணணும். இன்னும் நிறையப் பேர் போட்டியில் இருக்காங்க. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி இருக்கும். விழாக்களில் அரசியல் பேசக்கூடாது. ஆனாலும், நண்பர் சீமான் போன்றவர்கள் அண்ணன் ரஜினியைப் பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்“ எனக் காட்டமாகப் பேசினார்.