சினிமா

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் ! நீதியை களங்கப்படுத்திய தேர்தல் அதிகாரிகள் !

தமிழ்த் திரையுலகில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் தேர்தல் அதிகாரி செய்த முறைகேடுகளை ஆதாரப்பூர்வமாக குறிப்பிட்டு, தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக தேர்தல் அதிகாரிக்கு கடந்த 3 ஆம் தேதி வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்களிடம் விசாரித்தபோது…

கடந்த 30 ஆம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் என்னும் பணி 1ஆம் தேதி தொடங்கியது. அன்று தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர்கள், இணைச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குகள் என்னும் போது நேரமானதால் 573 வாக்குகள் மட்டும் எண்ணப்பட்டு, மீதி வாக்குகளை மறுநாள் 2ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்று வாக்குப் பெட்டிகளை சீல் வைத்து செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குகள் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் கையொப்பம் பெறாமல் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர் தேர்தல் அதிகாரிகள்.

மறுநாள் 574 லிருந்து வாக்குகள் எண்ணத் தொடங்கும் போதும் அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து சீலைத் திறந்திருக்க வேண்டிய தேர்தல் அதிகாரிகள் சர்வாதிகாரிகள் போல் அவர்கள் நோக்கத்திற்கு செயல்பட்பட்டுள்ளனர். மேலும் செல்லாத வாக்குகள் என 69 வாக்குகளை அறிவித்துள்ளனர். அந்த 69 வாக்குகளை காட்சிப் படுத்தவுமில்லை, யாரிடமும் காண்பிக்கவும் இல்லையாம். செல்லாத வாக்குகள் 69 என எவ்வாறு முடிவு செய்தனர் என்பது யாருக்கும் தெரியாத மர்மமாகவே இருக்கிறது. இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடிக்குள் செல்போனை அனுமதித்ததால் யாருக்கு வாக்களித்தோம் என்பதை புகைப்படங்கள் எடுத்துவந்து காண்பித்தால் 20 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர். மேலும் கேள்வி கேட்டால் கைதுசெய்ய நடவடிக்கை எடுப்பேன் என தேர்தல் அதிகாரி மிரட்டியிருக்கிறார். முழுக்கமுழுக்க தேர்தல் அதிகாரிகள் செய்த முறைகேடுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் மறுதேர்தல் நடைபெறும். ஆகையால்தான் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டவர்கள், பதவியேற்காமல் காலம் கடத்தி வருகின்றனர். இந்த தேர்தல் அதிகாரிகள் நீதிக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளனர் எனவும் புலம்புகின்றனர். தற்போது சமாதானம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

வாக்குகளை நேர்மையான முறையில் தேர்தல் அதிகாரிகள் எண்ணியிருந்தாலோ அல்லது நீதிமன்றத்தின் மூலம் மீண்டும் எண்ணப்பட்டாலோ சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் உள்ளிட்ட சிலர் தோல்வி பட்டியலில் இடம்பெறுவார்கள் எனத் தீர்க்கமாக கூறுகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button