15 லட்சம் கடனுக்காக, “தேனாண்டாள் முரளி”யை முற்றுகையிட்டு எழுதி வாங்கிய தயாரிப்பாளர் !
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வருகிற 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மன்னன், தேனாண்டாள் முரளி தலைமையிலான இரண்டு அணியினரும் வெளிமாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தயாரிப்பாளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் கடந்த வாரம் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள 62 தயாரிப்பாளர்களிடம் வாக்குகள் கேட்பதற்காக தேனாண்டாள் முரளி அணியினர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் 12 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் ராசாத்தி பாண்டியன் என்பவர் தன்னுடைய தயாரிப்பில் வெளியான “ஒன் வே” திரைப்படத்தை தேனாண்டாள் நிறுவனத்தின் சார்பில் வெளியிடுவதாக 15 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு படத்தை வெளியிடாமல் ஏமாற்றி விட்டீர்கள். வருடங்கள் பல கடந்தும் இன்னும் என்னிடம் வாங்கிய 15 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லை. நீங்கள் தயாரிப்பாளர்களை காப்பாற்றப் போகிறீர்களா ? பணத்தைக் கொடுத்துவிட்டு இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என தனது நண்பர்களுடன் முரளியை முற்றுகையுட்டுள்ளார்.
இதனை முற்றிலும் எதிர்பார்க்காத முரளி அணியினர் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர். பின்னர் சமாளிக்க முயன்று, முடியாமல் போனதால் வருகிற மே மாதம் முதல் வாரத்தில் 15 லட்சம் பணத்தை திருப்பித் தருவதாக பத்திரத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பித்து வந்திருக்கிறார்.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் நம்மிடம் பேசுகையில்.. ஊரெல்லாம் பல பேரிடம் கடன் வாங்கி வைத்துள்ளார் தேனாண்டாள் முரளி. இந்த தேர்தலில் அவர் தோற்றால் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கி விடுவார்கள். ஏதோ ஒன்று இரண்டு பேரிடம் கடன் வாங்கி இருந்தால் நண்பர்கள் உதவுவார்கள். ஊரெல்லாம் மிகப்பெரிய தொகையை கடனாக வாங்கியுள்ளார். எப்படி சமாளிக்கப் போகிறாரோ ! என்கிறார்கள்.
தேர்தல் சம்பந்தமாக நமது குழுவினர் எடுத்துள்ள கருத்து கணிப்பு சர்வே முடிவுகள் வருகிற 29 ஆம் தேதி வெளியாக உள்ளது.