தமிழகம்

ஐந்து தலைமுறை கண்ட தம்பதிகளின் 100-வது பிறந்தநாள் கொண்டாட்டம் !


கோவை மாவட்டம் சுல்தாண்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்டது சித்தநாயக்கன்பாளையம். இப்பகுதியில் வசித்துவரும் விவசாயி பொன்னுசாமி(101), மனைவி மீனாட்சியம்மாள்(93), கடந்த 1922 ஆம் ஆண்டு பிறந்த பொன்னுச்சாமிக்கு 100 வயதானதை ஒட்டி 5 தலைமுறையை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி 100 வது வயதில் சுபதினத்தில் பூர்ணாபிஷேகம் வைபவம் கொண்டாடப்பட்டது. 3 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள். பொன்னுச்சாமி மீனாட்சியம்மாளின் தம்பதியரின் 3 மகன்கள், 2 மகள்கள், 9 பேரன்கள், 5 பேத்திகள், 15 கொள்ளுபேரன்கள், 15 கொள்ளு பேத்திகள் என 5 தலைமுறையை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் பொன்னுச்சாமி, மீனாட்சியம்மாள் தம்பதியரின் 100 வது வயது சுபதினத்தில் பூர்ணாபிஷேக வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

உறவினர்கள் மற்றும் 5 தலைமுறையை சேர்ந்தவர்கள் பொன்னுச்சாமி, மீனாட்சியம்மாளிடம் ஆசி பெற்றனர். முன்னதாக கொங்கு மண்டலத்தில் பிரசித்திப்பெற்ற கும்மிப்பாட்டு பாடி வந்திருந்தவர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button