கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 700 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அரங்கத்தில் இரண்டு நாட்கள் கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இண்டர்நேசனல் மெய்பூகான் கோஜு ரியூ கராத்தே அமைப்பின் சார்பில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 700 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
வயது மற்றும் எடைப்பிரிவின் அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் 6 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் எஸ்.ருத்ரேஷ் முதல் பரிசும், கே.மிதுள்ராம் இரண்டாம் பரிசும், எஸ்.எஸ். ரக்ஷித் மூன்றாம் பரிசும், 7-8 வயது பிரிவில் முதல் பரிசு எஸ்.ரித்தீஷ்வரன் இரண்டாம் பரிசு வி, பிரணவதிக், மூன்றாம் பரிசு எஸ்.எஸ். ஹர்ஜித் மற்றும் 9-10 வயது பிரிவில் பி.கவுதம் ரக்சன், இரண்டாம் பரிசு பி.சி. பிரஜித், மூன்றாம் பரிசு ஜெ.ஜெயவேல், 11-12 வயது பிரிவில் என்.தரணி முதல் பரிசும், சி.பி.பாசில் மெர்வின் இரண்டாம் பரிசும், ஆர்.நவஜீவம் மூன்றாம் பரிசும், 12-13 வயது பிரிவில் ஆர்.பி. அருண்பிரசாத், இரண்டாம் பரிசு எஸ்.சரவணன், மூன்றாம் பரிசு எம் ஆகாஷ், 13- 14 வயது பிரிவில் முதல் பரிசு எஸ்.டி.தர்ஷண், இரண்டாம் பரிசு பி.சித்தார்த், மூன்றாம் பரிசை எஸ்.மாயழகும் தட்டிச்சென்றனர்.
மேலும் குமித்தே பெண்கள் பிரிவில் 9 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ராஜேஷ்வரி முதல் பரிசும், ஜெர்லின் சனீம் இரண்டாம் பரிசும், குஹநேத்ரா மூன்றாம் பரிசும் பெற்றனர். ஆண்களுக்கான குமித்தே பிரிவில் 11-12 வயது பிரிவில் வரநிதி ஆழ்வார் முதல் பரிசும், நவஜீவன் இரண்டாம் பரிசும், பிரஜன் மூன்றாவது பரிசும் பெற்று வெற்றிபெற்றனர். போட்டிகளின் முடிவில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
அமைப்பின் தலைவர் சென்சாய். பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் சென்சாய். சசிதரன், சென்சாய்.மாணிக்கவாசகம், சென்சாய். பஞ்சலிங்கம், சென்சாய். முத்தையா, சென்சாய். கிருஷ்ணமூர்த்தி, சென்சாய். தினேஷ் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.