சினிமா

“லால் சலாம்” படத்தின் நாயகி தன்யா மீது போலீசில் புகார்

லால் சலாம் படத்தின் நாயகி தன்யா மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், சமூக ஆர்வலர் RTI செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது… நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை தன்யா பாலகிருஷ்ணா நடித்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த நடிகை தன்யா பாலகிருஷ்ணா என்பவர் துணை நடிகையாக சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணா அவரது சமூக வலைதள பக்கத்தில் தமிழர்களை மிக கேவலமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி கொச்சை படுத்தியுள்ளார்.

அதில் அவர், “அன்புள்ள சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீகள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்துக்காக பிச்சை எடுக்கிறீகள், நாங்கள் கொடுக்கிறோம். உங்களுடைய மக்கள் எங்களுடைய அழகான நகரத்துக்கு வந்து அதனை ஆக்கிரமித்து கொச்சைப் படுத்துகிறார்கள். டேய் உங்களுக்கு வெட்கமே இல்லையாடா?” என்று எழுதியிருந்தார்.

தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணா போட்ட பதிவு வைரல் ஆகி தமிழர்களான எங்களது உணர்வை மிகவும் பாதித்துள்ளது. இது பொது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால், துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணா கதாநாயகியாக நடித்துள்ள லால் சலாம் படத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, ஆதலால் லால் சலாம் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்க வேண்டும்.

மேலும், தமிழ் மக்களின் மனதை புண்படுத்தவும், அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களின் மத்தியில் கலகத்தை உண்டு பண்ணும் நோக்கத்தில் துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை வேண்டுமென்றே இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்துள்ள லால் சலாம் படத்தின் இயக்குனரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா மீதும், லால் சலாம் படத்தை தயாரித்த லைக்கா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சுபாஷ்கரன் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button