சினிமா

பல்லடத்தில் பிரபல நடிகரின் உறவினர் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் !

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது 63 வேலம்பாளையம். இப்பகுதி அருகே உள்ள வி.ஆர்.பி நகரில் தனியாருக்குச் சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த தார் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து நச்சுப்புகை வெளியேறி அருகில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார் மனு அளித்துள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் தார் தயாரிக்கும் தொழிற்சாலை முன்பு தரையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தார் தொழிற்சாலை பிரபல நடிகரின் உறவினருக்குச் சொந்தமானது என்கிற அதிர்ச்சி தகவலையும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நச்சுப் புகையை வெளியேற்றும் மேற்படி தொழிற்சாலை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button