சினிமா
நடிகர் கார்த்தி நடித்துள்ள “விருமன்” வெளியாவதில் சிக்கல்
கொம்பன் திரைப்பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியாக இருக்கும் “விருமன்” திரைப்படத்தின் கதை எனது கதை என உரிமை கோரி இணை இயக்குனர் துரை என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் படத்தின் இயக்குனர் முத்தையாவுக்கு நீதிமன்றத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நோட்டீசை பெற்றுக் கொண்டு 12 ஆம் தேதி 10 மணிக்கு ஆஜராவதாக உறுதியளித்துள்ளார். 12 ஆம் தேதி 12மணிக்கு படம் வெளியிட இருப்பதாக கூறியிருக்கிறார் 2டி வழக்கறிஞர், விசாரணை முடியும் வரை படத்தை வெளியிட வேண்டாம் என நீதிபதி கூறியுள்ளதாக தெரிகிறது. ஆகையால் “விருமன்” திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.