விஷால் ஒரு பொறுக்கி பையன்..! : மிஷ்கின் ஆவேசம்
வெளிநாடுகளில் கதை எழுதுவதற்காக 35 லட்ச ரூபாய் உள்ளிட்ட 13 கோடி ரூபாயை செலவு செய்த நிலையில் துப்பறிவாளன்- 2ஐ இயக்கிவந்த இயக்குனர் படத்திலிருந்து விலகியதாக நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
துப்பறிவாளன்-2 படத்தை இயக்கிவந்த மிஷ்கின், பாதியிலேயே அதிலிருந்து விலகினார். ரீமேக் உரிமை உள்ளிட்டவைகுறித்து மிஷ்கின் விதித்த சில நிபந்தனைகளை விஷால் ஏற்காததே இதற்கான காரணம் என கூறப்பட்டது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஷால், துப்பறிவாளன் – 2 படத்தை இயக்கியவர், முறையாக திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தாமல், தயாரிப்பாளரின் 13 கோடி ரூபாய் பணத்தைச் செலவழித்த பின்னர், படத்தைவிட்டு விலகியிருப்பதாக தெரிவித்துள்ளார். இத்தகையவர்களிடம் மற்ற தயாரிப்பாளர்கள் இரையாகிவிடக்கூடாது எனவும் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷாலை பொறுக்கிப் பயன் என்று பொது மேடையில் இயக்குனர் மிஷ்கின் விமர்சித்த சம்பவம் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதன் 2 வது பாகம் வெளிவருவது வழக்கம். ஆனால் பெரிய வெற்றி பெறாத துப்பறிவாளன் படத்தை 2வது பாகம் தயாரிப்பது தொடர்பாக நடிகர் விஷாலும், இயக்குனர் மிஷ்கினும் வெளிநாட்டில் ரூம் போட்டு ஆலோசித்ததாக கூறப்படுகின்றது.
35 லட்சம் ரூபாய்செலவழித்து நாள்கணக்கில் கூடிப் பேசிய நிலையில் இயக்குனர் மிஷ்கின் கேட்ட சம்பளத்தில்உடன்பாடு இல்லாததால் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும், அவரிடம் தயாரிப்பாளர்கள்உஷாராக இருக்க வேண்டும் எனவும் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில் சீரியல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் மிஷ்கின், விஷாலுக்கு எதிராக சீரியசாகி லட்சக்கணக்கில் செலவழித்ததாக பொய் சொல்வதாகவும் விஷாலின் படத் தயாரிப்பு நிறுவன பெயரில் பணப் பறிமாற்ற முறைகேடு நடந்திருப்பதாகவும் வார்த்தைகளில் தீப்பற்ற வைத்தார்.
ஒரு பேயைக் கூட தேவதையாக்கியவன் நான் என்று சொன்ன மிஷ்கின், தன்னிடம் படத்திற்கான என்.ஓ.சியை பெற்றுக் கொண்டு தன்னைப் பற்றி தவறாக பேசுவதாக ஆதங்கப்பட்டார். விஷாலால் ஒரு கதை எழுத முடியுமா? என்று கேள்வி எழுப்பிய மிஷ்கின் கதை பற்றி என்ன தெரியும் என்றும், ஒரு கட்டத்தில் நடிகர் விஷாலை பொறுக்கிப் பயன் என்று கடுமையாக விமர்சித்தார்.
நண்பர்கள் நந்தாவும், ரமணாவும் விஷாலை ரோட்டில் கொண்டு வந்து விடுவார்களென்று கூறிய மிஷ்கின், தான் யார் என்பதை தயாரிப்பாளர்களிடம் கேட்டுப் பாருய்யா என்று சவால் விடுத்தார். துப்பறிவாளன் ஓடவில்லை என்றும் சைக்கோ வெற்றிப் படமில்லை என்றும் கூறி சம்பளத்தை தராமல் தட்டிக்கழித்த விஷால், தனது தாயை பழித்ததாக ஆவேசமானார்.
விஷாலுக்கு எதிரானது தமிழனுக்கு உரிய கோபம் என்றும் தனது தாத்தனின் திருக்குறளுக்காக இதுவரை பொறுமையாக இருந்ததாகவும், இனி விஷாலுக்கு ஆப்பு இருப்பதாகவும் மிஷ்கின் எச்சரித்தார்.
விஷால்- மிஷ்கின் இடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து மோதல் குழாயடிச் சண்டை போல கீழிறங்கி வந்துள்ளதாக திரை உலகினர் கருத்து தெரிவித்துள்ளனர்.