விமர்சனம்

பாலின மாறுபாடு ! உணர்வுகளை உதாசீனப் படுத்திய சமூகம் ! “அவள் பெயர் ரஜினி” திரைவிமர்சனம்

நவரசா ஃபிலிம்ஸ் சார்பில் ஶ்ரீஜித் கே.எஸ், ஶ்ரீஜித் பிளஸ்சி தயாரிப்பில், இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், நமிதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ், மலையாள மொழிகளில் வெளிவந்துள்ள படம் “அவள் பெயர் ரஜினி”.

கதைப்படி… அபிஜித் ( சைஜு குருப் ), கௌரி ( நமிதா பிரமோத் ) இருவரும் கணவன் மனைவி. இவர்கள் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது பெட்ரோல் இல்லாமல் கார் நின்றுவிட, மனைவியை காரில் விட்டுவிட்டு பெட்ரோல் வாங்குவதற்காக அபிஜித் செல்கிறார். சிறிது நேரத்தில் காருக்கு மேல் பயங்கர சப்தம் கேட்க கௌரி பயத்தில் நடுங்க, சிறிது நேரத்தில் கண்ணாடி வழியாக ரத்தம் வழிந்தோட, காரிலிருந்து கௌரி இறங்கி ஓடி அந்த வழியாக வந்த ஒருவரின் பைக்கில் அமர்ந்து பார்க்கும் போது காரின் மேல் கணவனை ஏதோ ஒரு உருவம் கொலை செய்வது தெரிந்ததும் அப்படியே மயங்கி கீழே விழுந்து மயக்கமடைகிறாள். மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார்.

பின்னர் காவல் ஆய்வாளர் பவுல் செல்வராஜ் ( அஸ்வின் குமார்) இந்த சம்பவத்தை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள, கொலை செய்தது பேய் எனவும், பெண்தான் கொலை செய்தாள் எனவும் பல்வேறு தகவல்கள் வருகிறது. இதேபோல் கௌரி யின் சகோதரன் நவின் ( காளிதாஸ் ஜெயராம் ) ஒருபுறம் தனியாக உண்மையைத் தேடி அழைகிறான். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் கௌரியை ஏதோ ஒரு உருவம் கொலை செய்ய துடிக்கிறது.

சைஜு குருப்பை கொலை செய்தது யார் ? எதற்காக அந்த கொலை சம்பவம் நடந்தது ? அந்த மர்ம நபரிடமிருந்து தனது சகோதரி கௌரியை நவீன் காப்பாற்றினாரா ? என்பது மீதிக்கதை…

விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களைத் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம் இந்தப் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் நமிதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கருணாகரன் சிறிது நேரம் வந்தாலும் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாலின மாறுபாடு காரணமாக ஒருவருக்கு ஏற்படும் உணர்வுகளையும், சமூகத்தின் பார்வையில் அவர்களின் வேதனைகளையும் தனது நேர்த்தியான திரைக்கதையின் மூலம் நொடிக்கு நொடி பல்வேறு திருப்பங்களுடன், துப்பறியும் த்ரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button