சினிமா

தொடர்ந்து வெளியீட்டு தேதி தள்ளிப்போகும் சீயான் விக்ரம் படங்கள் !

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் தயாரான “துருவ நட்சத்திரம்” படம் பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, கௌதம் மேனனின் கடன் பிரச்சினை காரணமாக தள்ளிப்போனது. அதேபோல் ஜனவரி-26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ப. ரஞ்சித்தின் “தங்கலான்” படமும் தள்ளிப் போகிறதாம்.

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளைத் தனித்தனியாக பிரித்து பல நிறுவனங்களுக்கு கொடுக்கலாம் என ஞானவேல்ராஜா சொல்லி இருக்கிறார். ஆனால் ஒரே நிறுவனத்தில் கொடுத்தால்தான் படம் தரமாக இருக்கும் என்கிறாராம் ரஞ்சித். குறித்த நேரத்தில் கிராபிக்ஸ் வேலைகள் முடியாததால், படம் வெளியாவதும் தள்ளிப் போகிறதாம். படம் ஆரம்பித்ததில் இருந்து தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தொடங்கிய சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை என புலம்புகிறார்கள் படக்குழுவினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button