Share

2D எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஜோதிகா தயாரிப்பில், சூர்யா, நஸ்ரியா பகத், லால், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிப்பில், ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “சீன்”.

கதைப்படி.. குற்றப்பிரிவு டிஎஸ்பி இன்பராஜ் ( சூர்யா ) வழக்குகளை கூர்நோக்குடன் அனுகும் நேர்மையான அதிகாரி. சைக்கோ கில்லரால் நடந்தேறும் தொடர் கொலைகளை விரைவாக புலனாய்வு செய்து, குற்றவாளி கைதுசெய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார். பின்னர் பணி ஓய்வு பெற விரும்புகிறார். ஆனால் அவர் சில ஆண்டுகளுக்கு முன் முடித்து வைத்த ஒரு வழக்கு அவரது நேர்மைக்கு சவால்விடும் வகையில் அமைகிறது. தொடர்ச்சியாக நடைபெறும் ஒரே மாதிரியாக நடந்தேறும் கொலைகள் ஒரு புத்திசாலி ஒருவரால் நடக்கிறது.

இதனால் வழக்கு விசாரணைக்கு மீண்டும் வருகிறார் இன்பராஜ். அவருக்கு உதவியாளராக மாயா ( நஸ்ரியா ) வருகிறார். ஆனால் இப்போது இன்பராஜ் போலீஸ் அதிகாரி கிடையாது. தொடர் கொலைகளுக்கான காரணம் என்ன ? கொலையாளியை பிடித்தாரா ? இல்லையா ? என்பது மீதிக்கதை…

காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற அதுவும் கண் பார்வை இல்லாத போலீஸ் அதிகாரி, சிக்கலான வழக்குகளை எவ்வாறு புத்திசாலித்தனமாக கையாண்டு முடிக்கிறார் என்பதை களகளப்பாகவும், சீரியஸாகவும் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

சுறுசுறுப்பான, கோபக்கார மற்றும் கண்பார்வை இல்லாத காவல் அதிகாரியாக சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கமாக சூர்யாவை பார்த்தவர்கள், இந்தப் படத்தில் இலகுவான ஸ்மார்ட் ஹீரோவாக சூர்யாவை பார்க்கலாம்.

நஸ்ரியா- சூர்யா காம்பினேஷன் களகளப்பாக கதையை நகர்த்துகிறது. சண்டைக்காட்சியில் நஸ்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கமான காதல், டூயட் இல்லாமல் கதையோடு காதல் மலர்கிறது. நஸ்ரியாவின் நடிப்பு சிறப்பு. அதேபோல் லால்-சூர்யா காம்பினேஷன் களகளப்பாக ரசிக்க வைக்கிறது.