திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மகளுக்கும், திட்டக்குடியைச் சேர்ந்த கண்ணன் ரவியின் மகன், ரவி கண்ணன் மகனுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் சம்பந்தமாக அதாவது திராவிட கொள்கை, கோட்பாடுகளை மறந்து, ஐதீக முறைப்படி திமுக பொதுச்செயலாளர் வீட்டு திருமணமா ? என சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் பல்வேறு விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்தது.
கண்ணன் ரவி ஃபிளாஷ் பேக் என்னவென்றால், சினிமாவில் வாய்ப்பு இல்லாமல், இருந்த மறைந்த பாக்கியராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்த இராவண கோட்டம் என்கிற படத்தை தயாரிக்கிறார். அதன் இசை வெளியீட்டு விழாவை துபாயில் நடத்துகிறார். அந்த விழாவுக்கு தனது சொந்த செலவில் திரையுலக பிரபலங்களை அழைத்துச்சென்று, புகைப்படங்கள், வீடியோ எடுத்து துபாயில் தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்கிறார். அதன் பின்னர் தலைவர் தம்பி தலைமையில் என ஜீவா நாயகனாக நடித்த படத்தை தயாரித்தார். மேலும் TN 2026 படத்தையும் தயாரித்துள்ளார். பிரபலங்களை தனக்கு நெருக்கமான நபர்களாக சொந்தப் பணத்தில் விளம்பரங்கள் செய்து பெரிய ஆளாக தன்னை காட்டிக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் கதிர் ஆனந்த் இவரை நம்பி முதலீகள் செய்துள்ளதாகவும், பணத்தை காப்பாற்றவே இந்த திருமணம் நடந்ததாகவும் கூறுகின்றனர். துரைமுருகன் கடந்த ஆட்சியில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது, தனக்கு குவாரிகள் ஒதுக்கியதாகவும், அதை தற்போது விரிவு படுத்த இருப்பதாகவும், முதலீடு செய்ய துபாயில் வசூல் வேட்டை நடத்தி வருகிறாராம். கண்ணன் ரவி ஏற்கனவே வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காததால், பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. கூடிய விரைவில் துபாய் செல்ல முடியாத நிலை ஏற்படும். துரைமுருகன் குடும்பம்தான் கண்ணன் ரவியின் போலி பிம்பத்தைப் பார்த்து ஏமாந்து விட்டது என்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, கண்ணன் ரவி துபாயில் பாகிஸ்தான் நிறுவனத்திடம் பணம் வாங்கிக்கொண்டு திருப்பித்தராமல் காலம் கடத்தியதாகவும், அந்த நிறுவனம் நெருக்கடி கொடுத்ததால் காசோலை கொடுத்திருக்கிறார். பின்னர் வங்கியில் பணம் இல்லை என காசோலை திரும்பி வந்துள்ளது. அதன்பிறகு அந்த பாகிஸ்தான் நிறுவனம் கண்ணன் ரவி மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஜூன் மாதம் வந்துள்ளது. அதில் காசோலை மோசடிக்கு 50,000 திர்ஹம், வாங்கிய பணத்துடன் 9 சதவீதம் சேர்த்து 56 கோடி நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளதாம். டிசம்பர் மாதத்துக்குள் கண்ணன் ரவி நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கில் செலுத்த வேண்டிய 56 கோடியை செலுத்தியாக வேண்டும் என்கிறார்கள்.

இதோடு துபாயில் கண்ணன் ரவி காசோலை மோசடி வழக்கு சம்மந்தமான விபரம்,
பண மோசடி, செக் மோசடி சம்பந்தமாக துபாய் நீதிமன்ற அறிவிப்பு வெளியான ஆவணத்தில்: நபரின் பெயர்: Kannan Ravi Kannan
வழக்கு எண்: 253/2022/15475
திரும்பிய காசோலைகள் தொடர்பான அமலாக்க நடவடிக்கை.
கோரப்பட்ட தொகை: 5,41,693.33 UAE திர்ஹாம்.
அறிவிப்பு தேதி: 13.12.2023.
Dubai Courts – 13 December 2023 நீதிமன்றம் அறிவிப்பு.


