வடசென்னை ரேசன் கடைகளில் தினந்தோறும் 1000 கிலோ அரிசியை அசால்ட்டாக கடத்தும் சடகோபால் !
தமிழ்நாடு அரசு ஏழை, எளியோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரேசன் கடைகள் மூலம் இலவசமாகவும், மானிய விலையிலும் உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது. இவ்வாறு ரேசன் கடைகளில் விநியோகம் செய்யும் பொருட்களை, குறைந்த விலைக்கு வாங்கி, வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிப்பதையே தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வடசென்னை இராயபுரம் மண்ணார்சாமி கோயில் தெரு ஆவின் அருகில் உள்ள வணிக வளாகத்தில், முதல்வர் மருந்தகம் அம்மா உணவகம், வண்ணாரப்பேட்டை கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடை எண் : 011 மற்றும் நியாயவிலைக் கடை எண் : 012
இயங்கி வருகிறது. இந்த இரண்டு ரேசன் கடைகளுக்கு இடையில் பசுமை பண்ணை காய்கறி அங்காடி நியாயவிலைக் கடை என்ற பெயரில் வண்ணாரப்பேட்டை கூட்டுறவு சொசைட்டி நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்த நியாயவிலை காய்கறி கடையில் மேலாளராக ( incharge ) செயல்படுபவர் சடகோபால். இவர் ஏற்கனவே பக்கத்தில் இருக்கும் 11 ஆம் நம்பர் ரேஷன்கடையில் வேலை செய்தபோது கடையில் உள்ள ரேஷன் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்றார் என்பதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். இந்த நபர் மீண்டும் வண்ணாரப்பேட்டை கூட்டுறவு சொசைட்டி எம்.டி அலுவலகத்தில் பணி புரியும் தனசேகரன் என்ற மேலாளர் உதவியுடன் மீண்டும் 11, 12 ரேஷன் கடைகள் இரண்டுக்கும் நடுவில் உள்ள பசுமை பண்ணை காய்கறி கடையில் தற்போது, மீண்டும் இன் சார்ச் ஆக பணியில் அமர்ந்துள்ளார்.
இந்நிலையில், கடை எண் : 11 ல் ஊழியர் தமிழ்செல்வி, கடை எண் : 12 ல் ஐஸ்வர்யா ஆகிய இருவரின் துணையுடன், இரண்டு ரேஷன் கடைகளிலும் பயணாளிகள் வாங்காத ரேஷன் அட்டைகள் மூலமாக பயணாளிகள் வாங்கியதாக கணக்கு காட்டி பருப்பு, கோதுமை, அரிசி உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளிலிருந்து எடுத்து பசுமை பண்ணை காய்கறி அங்காடி உள்ளே வைத்து 25 கிலோ, 50 கிலோ மூட்டைகளாக கட்டி தினமும் தனது வெள்ளை நிற ஸ்கூட்டரில் இரண்டு, இரண்டு மூட்டைகளாக வைத்து தினமும் சுமார் 15 மூட்டைகள் ரேஷன் அரிசி, 2 மூட்டை கோதுமை, 20 கிலோ பருப்பு உள்ளிட்டவைகளை சட்ட விரோதமாக கடத்துவதையே தொழிலாக செய்துவருகிறார்.
கடத்திய ரேஷன் பொருட்களை மாவு அரைப்பவர்கள் மற்றும் வட மாநிலத்தவர்களுக்கு கொண்டு சென்று அரிசி கிலோ 15 ரூபாய்க்கும், கோதுமை ரூபாய் 8 க்கும், பருப்பு 70 ரூபாய்க்கும் விற்பனை செய்துவிட்டு, ஐஸ்வர்யா மற்றும் தமிழ்செல்வி இருவருக்கும் அரிசிக்கு கிலோ 10 ரூபாய், கோதுமை கிலோ 5 ரூபாய், பருப்புக்கு கிலோ 40 ரூபாய் என கொடுத்து விடுகிறார். இப்படியாக சடகோபால், தமிழ்செல்வி, ஐஸ்வர்யா ஆகியோரது கூட்டணி தினமும் ஏழை, எளிய மக்களுக்கு அரசு இலவசமாக கொடுக்கும் அரிசியையும், மானிய விலையில் கொடுக்கும் கோதுமை மற்றும் பருப்புகளை கள்ளச் சந்தையில் விற்று பணம் சம்பாதித்து வருகின்றனர்.
இவர்கள் மூவர் மீதும் வண்ணாரப்பேட்டை கூட்டுறவு சொசைட்டி எம் டி பாரதி மற்றும் சிவில் சப்ளைஸ் ஏ சி வண்ணாரப்பேட்டை ஆர்த்தி மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சிவில் சப்ளைஸ் சிஐடி போலிஸ் எனன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்று அப்பகுதியில் உள்ள சமூக
ஆர்வலர்கள் கேட்கின்றனர். மேலும் இம் மூவர் மீதும் துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க, உயர் அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
_ கே.எம்.எஸ்




