மாவட்டம்

பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில், காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு !

திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்தவும், அமைதியை நிலைநாட்டவும், காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் இணைந்து பிரம்மாண்ட கொடி அணிவகுப்பை (Flag March) நடத்தினர். இந்த அணிவகுப்பை குமரலிங்கம் காவல் ஆய்வாளர் முனிசாமி தலைமையில், துணை ராணுவப் படை அதிகாரி மினி குமாரி முன்னிலை வகித்து வீரர்களை வழிநடத்தினார்.

இந்த அணிவகுப்பின் சிறப்பம்சமாக, பெண் காவல் ஆய்வாளர்களான தனலட்சுமி, தளி காவல் ஆய்வாளர், சரோஜா, அமராவதி காவல் ஆய்வாளர், பஞ்சலட்சுமி, கணியூர் காவல் ஆய்வாளர் பெருமளவில் பங்கேற்று கம்பீரமாக அணிவகுத்துச் சென்றனர். குமரலிங்கம் காவல் நிலையத்தில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, முக்கிய இடங்களைச் சென்றடைந்தது.

குமரலிங்கம் பேருந்து நிலையம்
கொழுமம் சாலை சங்கராமநல்லூர் முக்கிய வீதிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் மற்றும் சீருடை அணிந்த காவல்துறையினரின் இந்த அணிவகுப்பு, மீண்டும் காவல் நிலையத்திலேயே நிறைவடைந்தது.  இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான சூழலைப் பேண அரசு இயந்திரம் தயார் நிலையில் இருப்பதை இந்த அணிவகுப்பு பறைசாற்றியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button