மாவட்டம்

பல்லடத்தில் அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை, பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு !

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசுப்பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்த பழமருதூரை சேர்ந்தவர் சிவனேசன், இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு தவசி, சூர்யா என்கிற இரு மகன்களும் ஷிவானி என்கிற 15 வயது மகளும் உள்ளனர். மேலும் செல்வி பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், அங்குள்ள குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மேலும் ஷிவானி பல்லடம் அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார்.

இந்நிலையில் ஷிவானி படிப்பில் நாட்டம் காட்டாததால் குடும்பத்தினர் படிக்கச்சொல்லி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வழக்கம் போல் வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில், ஷிவானி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த சகோதரர் மற்றும் தாயார் பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி ஷிவானி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஷிவானியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஷிவானியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button