திரைவிமர்சனம்

ஓடிப்போன காதல் ஜோடி ! ஆவணக் கொலை செய்ய ஆட்களை அனுப்பி வைத்த தந்தை ! “மனு” படத்தின் விமர்சனம் !

ஆர்‌. சதீஷ் பாபு தயாரிப்பில், ஶ்ரீயுத், ரேஷ்மா, கௌரி, தேவி ஶ்ரீ, விஜய் செல்வன், ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், துர்கா பி.எஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “மனு”.

கதைப்படி.. கிராமத்தில் கொடுத்த கடனுக்காக விவசாயியின் நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு, அம்பலத்துக்காரரும் ( விஜய் செல்வன் ) அவரது தம்பியும் ( ராஜேஷ் ) அடித்து துன்புறுத்துகிறார்கள். அந்த சம்பவத்தை தனது மகள் மலர் ( ரேஷ்மா ) பார்த்து பரிதாபப்படுவதை பார்த்துவிடுகிறார். தான் செய்யும் செயல்கள் குழந்தையின் மனதை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக, நகரத்தில் தங்கி படிக்க அனுப்புகிறார்.

பின்னர் 15 வருடங்கள் கழித்து படிப்பை முடித்துவிட்டு கிராமத்திற்கு திரும்புகிறார் மலர். தனது தோழியுடன் ஊரை சுற்றிப்பார்க்க செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மனோ ( ஶ்ரீயூத் ) என்கிற இளைஞரை சந்திக்க நேரிடுகிறது. அவனது துடிப்பான செயல்பாடுகள் மலருக்கு பிடித்துப் போகிறது. பின்னர் இருவரும் காதலர்களாக சுற்றித்திரிகிறார்கள். காலப்போக்கில் அம்பலத்தாருக்கு தெரியவர மகளை கண்டிக்கிறார். பிறகு இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போகிறார்கள். மனோவை தீர்த்துக்கட்ட ஆட்களை அனுப்புகிறார் அம்பலத்தார்.

ஓடிப்போன காதலர்கள் தங்களின் விருப்பப்படி வாழ்ந்தார்களா ? இல்லையா ? என்பது மீதிக்கதை..

கிராமங்களில் வசிக்கும் மக்களின் இயல்பான வாழ்க்கைமுறை, காதல், குடும்ப உறவு, பாசம், ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் இழப்பு என கதையை உருவாக்கிய இயக்குனர், திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். சமூகத்திற்கு தான் சொல்ல நினைத்ததை, இன்னும் மெனக்கெட்டிருந்தால் மக்களிடையே சேர்ந்திருக்கும்.

நடிகர், நடிகைகள் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், தங்களால் முடிந்தளவுக்கு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button