சினிமா

நடிகர் திலகம் சிவாஜி விருது வழங்கும் விழா

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் ஹாலில் நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் இன்னிசை கச்சேரியிடன் விருது வழங்கும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சினிமா சன்டை பயிற்சியாளர் பெப்சி விஜயன் கலந்து கொண்டு சிவாஜியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவருக்கு சிவாஜியின் தீவிர பக்தர் சிவாஜி ரவி விருது வழங்கி பாராட்டினார். காமெடி நடிகர் சின்னிஜெயந்த் கலந்து கொண்டு சிவாஜியின் பாடல்களை பாடி சிவாஜியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு அரங்கத்தை சிரிப்பழையில் ஆழ்த்தினார். சாம்போ இன்பராஜ் இன்னிசை குழுவினர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களின் பாடல்களை சிறப்பாக பாடி சிவாஜியின் நினைவுகளை கண்முன்னே நிறுத்தினர்.

இசையமைப்பாளர் சங்கர்கணேஷ் கலந்து கொண்டு சிவாஜியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு பாடல்களைப் பாடி விருதுகளை வழங்கி சிறப்பித்தார். மேடை நடனக் கலைஞர்கள் மற்றும் முக்கிய துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பிரமுகர்களுக்கு சிவாஜியின் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் கே.எம். சிராஜூதீன்,தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் க.குமார், மாநில துணைத்தலைவர் அமித்குமார், பத்திரிகையாளர்கள் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button