சினிமா

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி, உயிருக்கு ஆபத்தான நிலையில் முதலுதவி சிகிச்சை..!

நடிகர் விஜய் ஆண்டனி படப்பிடிப்புக்காக மலேசியாவில் உள்ள லங்காவிக்கு சென்றிருந்தார். அங்கு பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது, சிம்மிசிப் போன்ற படப்பிடிப்பு சாதனங்கள் ஒரு போட்டில் வைத்து, விஜய் ஆண்டனி ஸ்ட்ரீமர் போட்டை தனியாக ஓட்டி வருவது போல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அப்போது நடிகர் விஜய் ஆண்டனி 120 கிலோமீட்டர் வேகத்தில் பைக் போட்டை ஓட்டி வரும்போது படப்பிடிப்பு குழுவினர் இருந்த போட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் போட் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அவருக்கு நீச்சல் தெரியாததால் மூழ்கியுள்ளார். விஜய் ஆண்டனி நீரில் மூழ்கி சிறிதுநேரம் கழித்து அவரது உடல் மேலே மிதந்துள்ளது. பின்னர் அவரைத் தூக்கியபோது, அவரது முகம் முற்றிலும் சேதமடைந்த நிலையில், பற்கள் உடைந்து உடல் முழுவதும் பலத்த காயத்துடன், சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார்.

பின்னர் அவரை லங்காவியில் உள்ள மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். நாளை மேல் சிகிச்சைக்காக மலேசியாவிற்கு கொண்டு வருவதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். அங்கு ஒளிப்பதிவாளர் ஓம், டான்ஸ் மாஸ்டர் கல்யாண் ஆகியோர் மருத்துவ மனையில் இருந்து வருகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button